தொடர் மழையால் நிரம்பிய போடி மீனாட்சியம்மன் கண்மாய்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
போடி ; போடி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் கொட்டகுடி ஆற்றில் பெருக்கெடுத்து வரும் மழை நீரால் போடி மீனாட்சியம்மன் கண்மாய் நிரம்பியது.போடி ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய். 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கண்மாயில் தண்ணீர் தேங்குவதன் மூலம் சுந்தரராஜபுரம், விசுவாசபுரம், அம்மாபட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி,
தொடர் மழையால் நிரம்பிய போடி மீனாட்சியம்மன் கண்மாய்



போடி ; போடி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் கொட்டகுடி ஆற்றில் பெருக்கெடுத்து வரும் மழை நீரால் போடி மீனாட்சியம்மன் கண்மாய் நிரம்பியது.போடி ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய். 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கண்மாயில் தண்ணீர் தேங்குவதன் மூலம் சுந்தரராஜபுரம், விசுவாசபுரம், அம்மாபட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி, பத்திரகாளிபுரம். மீனாட்சிபுரம், காமராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் பெருகுவதோடு, 450 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பயன் பெறும் வகையில் உள்ளது.

போடி, குரங்கணி, கொட்டகுடி உள்ளிட்ட பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து பங்காருசாமி, சங்கரப்பன், மீனாட்சியம்மன் கண்மாய் முழுவதும் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது. மீனாட்சியம்மன் கண்மாயில் ஆண்டு தோறும் டிச., ஜன., பிப்ரவரியில் முக்குளப்பான், பாம்புதாரா, கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, பிளமிங்கோ உள்ளிட்ட பறவைகள், கடல் சார்ந்த கொக்குகளும் இரை தேட இங்கு வந்து இனப்பெருக்கம் மேற்கொள்ளும். ஏப்ரல், மேயில் சொந்த பகுதிக்கு சென்று விடும்.பறவைகள் தங்கும் வகையில் கண்மாய் கரையோரங்களில் மரங்கள் வளர்ப்பதோடு, கண்மாயில் தேக்கிய பிளாஸ்டிக் கழிவுகள், ஆகாயத்தாமரை அகற்றிடவும் இதில் படகு சவாரி துவங்கிட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X