புதர் மண்டிய மழை மானி பராமரிக்க வலியுறுத்தல்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலை தாலுகாவில், உடுமலை நகராட்சி, தளி பேரூராட்சி மற்றும் உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட, 61 ஊராட்சிகள் உள்ளன.பெரிய பரப்பளவைக்கொண்ட தாலுகா பகுதிகளில், பெய்யும் மழை அளவை கணக்கிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், மழையளவை கொண்டு, விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கு ஆதாரமாக மழை மானி உள்ளது.உடுமலை தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள மழை மானி, பராமரிப்பு
புதர் மண்டிய மழை மானி பராமரிக்க வலியுறுத்தல்

உடுமலை:உடுமலை தாலுகாவில், உடுமலை நகராட்சி, தளி பேரூராட்சி மற்றும் உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட, 61 ஊராட்சிகள் உள்ளன.பெரிய பரப்பளவைக்கொண்ட தாலுகா பகுதிகளில், பெய்யும் மழை அளவை கணக்கிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், மழையளவை கொண்டு, விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கு ஆதாரமாக மழை மானி உள்ளது.உடுமலை தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள மழை மானி, பராமரிப்பு இல்லாமல், புதர் மண்டியும், மழை கணக்கிடும் கருவிகள் பழுதடைந்தும் காணப்படுகிறது.இதனால், உடுமலை நகர பகுதிகளில் பெய்யும் மழையளவு துல்லியமாக கணக்கிட முடியாமல், பெயரளவிற்கு உள்ளது.எனவே, பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழை மானியை பராமரிக்கவும், பெரிய தாலுகாவான உடுமலை பகுதியில், மேலும் பல இடங்களில் மழை மானி அமைக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X