வக்கீல்கள் மறியல்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சிவகாசி : விருதுநகர் குருமூர்த்தி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் 35. வக்கீலான இவர் தனியார் பைனான்சில் கடனில் டூவீலர் வாங்கி இருந்தார். சிவகாசி நீதிமன்ற வளாகத்தில் டூவீலரை நிறுத்தி இருந்தபோது, பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் அதை எடுத்துச் சென்றனர். தவணை முழுவதும் செலுத்திய பிறகும் டூவீலரை எடுத்துச் சென்ற நிறுவனம் மீது வழக்குப்பதிய கோரி திருத்தங்கல் போலீஸ்



சிவகாசி : விருதுநகர் குருமூர்த்தி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் 35. வக்கீலான இவர் தனியார் பைனான்சில் கடனில் டூவீலர் வாங்கி இருந்தார். சிவகாசி நீதிமன்ற வளாகத்தில் டூவீலரை நிறுத்தி இருந்தபோது, பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் அதை எடுத்துச் சென்றனர். தவணை முழுவதும் செலுத்திய பிறகும் டூவீலரை எடுத்துச் சென்ற நிறுவனம் மீது வழக்குப்பதிய கோரி திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.

வழக்குப்பதியாததால் வக்கீல் சங்கத் தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் காலை 11:10 மணிக்கு வக்கீல்கள் சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு ரிசர்வ் லைனில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். திருத்தங்கல் எஸ்.ஐ., ரமேஷ் வழக்குப்பதிவு செய்வதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர். பஸ் மறியலால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X