திறனறி போட்டிகள்
சிவகாசி: காளீஸ்வரி கல்லுாரி ஆங்கிலத்துறை இலக்கிய மன்றம் தொடக்க விழா, மாணவர்களுக்கான திறனறிப் போட்டிகள் நடந்தது. மாணவி மரிய கிறிஸ்டினா வரவேற்றார். துறை தலைவர் பெமினா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். கல்லுாரி துணை முதல்வர் பாலமுருகன் பேசினார். இலக்கிய மன்ற அலுவலக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். நாடகம், நடனம், பாடல், இலக்கிய அணிவகுப்பு, மவுன நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவர் பிரதீப் நன்றி கூறினார். ஆங்கிலத் துறையைச் சேர்ந்த 115 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு கருத்தரங்கம்
சிவகாசி: அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி மகளிர் அமைப்பு, நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.மகளிர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரிபாயா மீரா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். சிவகாசி அரசு மருத்துவமனை குழந்தை நல மருத்துவர் கதிரவன், மதுரை குழந்தை மருத்துவ அகாடமி அதிகாரி மகாலட்சுமி பேசினர். நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி தமிழரசி நன்றி கூறினார். இளங்கலை, முதுகலை மாணவிகள் 800 பேர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மகளிர் அமைப்பு, நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.