புதிதாக அலுவலகம், தொழிற்சாலை,வீடு, வணிக கட்டடங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் வைத்துள்ளதை பதிவு செய்வது அவசியம். தேசிய கட்டட பாதுகாப்பு விதி 2016ன் படி குடியிருப்புகள், பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனைகள், கூட்டரங்குகள், வணிக நிறுவனங்கள், வளாகங்கள், தொழிற்சாலை கட்டடங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இக் கட்டடங்களில் அவசர கால வழிகள், தீ தடுப்பு கருவிகள் இருப்பது அவசியம்.
இதில் பல கட்டடங்கள் நிர்ணயித்த அளவை விட கூடுதலாக உள்ளது. இதில் 15 மீட்டர் உயரத்திலான கட்டடங்களுக்கு தீயணைப்புத்துறை இயக்குனர் ஒப்புதல் பெற வேண்டும். 18.3 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள கட்டடங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கட்டட உரிமையாளர்கள் முறைபடி தீயணைப்புத்துறையில் பதிவு செய்து பாதுகாப்பு உபகரணங்களை வைப்பது அவசியம்.
விதிமுறைகளை கடைபிடிக்காத கட்டட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.மாவட்ட அலுவலர் கல்யாண்குமார் கூறுகையில், வணிக நிறுவனங்கள் விதிமுறைகள் தெரிந்தும் பலர் பதிவு செய்யாமல் உள்ளனர். தேசிய கட்டட விதி தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அதிக உயர கட்டடங்கள் உள்ளன. இவற்றில் பாதுகாப்பு விதிகளையும் கடைபிடிப்பது இல்லை.இதுபோன்ற கட்டடங்களை விரைவில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றார்.