திருவாடானை தாலுகாவில் முதன்மை செயலாளர் ஆய்வு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திருவாடானை : திருவாடானை தாலுகா அலுவலகத்தில் கைத்தறித்துறை முதன்மை செயலாளர் தர்மேந்திரபிரதாப் யாதவ் ஆய்வு செய்தார்.பட்டா மாற்றம், நிலம்உட்பிரிவு, பல்வேறு வகையான சான்றிதழ்வழங்குதல், சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்கள் தாலுகா அலுவலகம் வழியே செயல்படுத்தப்படுகிறது. ஆனால் மக்களுக்கு சேவை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. இதனால் தாலுகா



திருவாடானை : திருவாடானை தாலுகா அலுவலகத்தில் கைத்தறித்துறை முதன்மை செயலாளர் தர்மேந்திரபிரதாப் யாதவ் ஆய்வு செய்தார்.பட்டா மாற்றம், நிலம்உட்பிரிவு, பல்வேறு வகையான சான்றிதழ்வழங்குதல், சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்கள் தாலுகா அலுவலகம் வழியே செயல்படுத்தப்படுகிறது. ஆனால் மக்களுக்கு சேவை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. இதனால் தாலுகா அலுவலகங்களில் விரிவாக ஆய்வு செய்யவேண்டும் என தலைமை செயலர் இறையன்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திருவாடானை தாலுகா அலுவலகத்தில் கைத்தறித்துறை முதன்மை செயலாளரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு செய்தார். வருமான சான்றிதழ், வருவாய் சான்றிதழ்,கேட்டு வரப்பெற்ற விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதா, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால், நிராகரிப்புக்கான காரணம் சரியா என்றும், பட்டா மாறுதல்செய்வதில் தாமதம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கலெக்டர் ஜானி டாம்வர்கீஸ், தாசில்தார் செந்தில்வேல்முருகன் உடனிருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X