வெங்காயத்திற்கு விலையின்றி விவசாயிகள் தவிப்பு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்திற்கு பேதிய விலை கிடைக்காமல் ஆறு மாதமாக விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய வரத்து சின்ன வெங்காயத்திற்கு விலை அதிகரித்து வருவதை போல் பழைய சின்ன வெங்காயத்திற்கும் உரிய விலை கிடைக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள் மாவட்டத்தில் அதிக நிலப்பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு


ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்திற்கு பேதிய விலை கிடைக்காமல் ஆறு மாதமாக விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய வரத்து சின்ன வெங்காயத்திற்கு விலை அதிகரித்து வருவதை போல் பழைய சின்ன வெங்காயத்திற்கும் உரிய விலை கிடைக்க வேண்டும் என்கின்றனர்

விவசாயிகள் மாவட்டத்தில் அதிக நிலப்பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதால் ஆறு மாதமாக விலை இறங்குமுகமாகவே உள்ளது. இதனால் அறுவடை சின்ன வெங்காயத்தை மூங்கில் பாடல்களில் வைத்து சேமித்து வைத்துள்ளனர். ஆனால் ஆறு மாதம் முடிந்த பின்னும் இன்னும் நல்ல விலை கிடைக்காமல் உள்ளது. ஆனால் தற்போது அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் மட்டுமே கிலோ ரூ. 35க்கு மேல் விற்பனை ஆகிறது.

ஆனால் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வெங்காயம் விலை இன்னும் அதிகரிக்காமல் உள்ளது. இதனால் விவசாயிகள் சேமிப்பு வெங்காயத்திற்கு எப்போது விடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். வெங்காயம் ஏற்றுமதிக்கு மீண்டும் அனுமதி கொடுத்தால் விலை ஏற வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

ஏற்றுமதிக்கு அனுமதியுங்க ஆறு மாதங்களாக சின்ன வெங்காயம் விலை அதிகரிக்காமல் கிலோ ரூ. 15க்கு விற்று வந்தது. உரிய விலை கிடைக்காமல் போனதால் வெங்காயத்தை விவசாயிகள் மூங்கில் பாடல்களில் வைத்து சேமிப்பு செய்தனர். இருந்தபோதிலும் போதுமான விலை கிடைக்கவில்லை. ஏற்றுமதிக்கு அரசு அனுமதி தந்தாலே விலை அதிகரிக்கும். இதனை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னச்சாமி, விவசாயி ,பாலப்பன்பட்டி.............


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X