விருதுநகர் : விருதுநகர் ரயில்வே காலனி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பொங்கல் விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.ஜூலை 17 ல் பொங்கல் சாட்டுதல் நிகழ்ச்சியோடு துவங்கிய பொங்கல் விழாவில், காப்புகட்டி முளைப்பாரி போடப்பட்டது. ஆடி வெள்ளியான நேற்று மாலை நடந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள் பலர் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.நாளை காலை 7:00 மணிக்கு பால்குடம், சந்தனக்குடம், தீர்த்தம் எடுத்தலும், 108 சங்காபிேஷக பூஜையும் நடக்கிறது.
மதியம் அன்னதானம் இரவு சக்தி கரகம், முளைப்பாரி எடுத்தல் நடக்கிறது.ஆக. 8ல் அக்னிச்சட்டி எடுத்தல், பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலமும் ஆக. 9 மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்குதல், முளைப்பாரி குளிர்விக்கும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்று வட்டார பகுதி கோயில்களில் வரலட்சுமி நோன்பு விரதம் கொண்டாடப்பட்டது.
ராஜபாளையம் பெரியமாரியம்மன் கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் கூழ் காய்ச்சுதல், பிரசாதம் படைத்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ரவி ராஜா செய்திருந்தார்.