வாறுகால்களில் கழிவுநீர் தேக்கம், குவியும் குப்பை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் வாறுகால்களில் கழிவுநீர் தேங்கியும், அள்ள படாத குப்பையால், ஏற்படும் துர்நாற்றத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. நகரை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள நகராட்சியின் சுகாதாரப் பிரிவு உள்ளது.இந்தப் பிரிவில் 1 நகர் நல அலுவலர், 6 ஆய்வாளர்கள், 8 மேற்பார்வையாளர்கள்,



அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் வாறுகால்களில் கழிவுநீர் தேங்கியும், அள்ள படாத குப்பையால், ஏற்படும் துர்நாற்றத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. நகரை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள நகராட்சியின் சுகாதாரப் பிரிவு உள்ளது.இந்தப் பிரிவில் 1 நகர் நல அலுவலர், 6 ஆய்வாளர்கள், 8 மேற்பார்வையாளர்கள், நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 92 பேர்கள், தனியார் துப்புரவு பணியாளர்கள் 120 என்ற எண்ணிக்கையில் உள்ளனர். நகரை சுத்தம் செய்வதற்கு டெம்பர் பிளேசர் லாரிகள் 2, பேட்டரி வாகனங்கள் 381 காம்பேக்டர் பின் 1, லாரிகள் 2 என, இவற்றை பயன்படுத்தி, நகரில் உள்ள ஒட்டுமொத்த குப்பையையும் அள்ளுகின்றனர்.

ஒரு நாளைக்கு 23 டன் குப்பை சேருகிறது. அதில், 14 டன் குப்பையை சேகரித்து ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மினி மைக்ரோ கம்போஸ்ட் மையத்தில் கொண்டு செல்லப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது.சுகாதாரப் பிரிவில் இத்தனை வசதிகள் இருந்தும், நகரின் பல இடங்களில் வாறு கால்களில் கழிவு நீர் தேங்கியும், மெயின் ஓடைகள் அடைபட்டும், குப்பை பல பகுதிகளில் குவியலாக குவிக்கப்பட்டு உள்ளது. தற்போதய மழையில் மழை நீர் தேங்கி தெருக்களில் ஓடுகிறது.பூக்கடை வீதி, புளியம்பட்டி பகுதி, விருதுநகர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை காலங்களில், மழை நீரும், கழிவு நீரும் கலந்து வெள்ளக் காடாக உள்ளது. சிறிய மழை பெய்தால் கூட, ஆங்காங்கு உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது.நகரில் உள்ள முக்கியமான மெயின் வாறுகால்கள், ஓடைகளை துப்புரவு செய்வது இல்லை. பெரும்பாலானவை ஆக்கிரமிப்பில் உள்ளது. பஜார் பகுதிகளில் இருக்கின்ற வாறு கால்களை அந்தந்த பகுதி கடைக்காரர்கள் ஆக்கிரமித்து குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டுகின்றனர். இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய சுகாதாரப் பிரிவு கண்டு கொள்ளாமல் உள்ளது.'மாஸ் கிளீனிங்' என்ற பெயரில், ஏதாவது ஒரு பகுதியை கடமைக்கு சுத்தம் செய்து விட்டு, 'போட்டோ' விற்கு போஸ் கொடுக்கின்றனர்.

பல பகுதிகளில் துப்புரவு பணியாளர்களை வருவது இல்லை என்ற புகார்கள் தான் வருகிறது. நகரில் தாங்க முடியாத கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது.நகராட்சி கூட்டத்தில் ஒவ்வொரு முறையும் 'அஜெண்டா' வில், கொசு மருந்து வாங்க லட்சக்கணக்கான நிதி காட்டப்படுகிறது. அவை பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.தற்போது மழைக்காலம் துவங்கிவிட்ட நிலையில், கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. நகராட்சி சுகாதார பிரிவு முனைப்புடன் செயல்பட்டு நகரை சுத்தமாகவும், தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X