பஸ் வசதி இல்லாததால் தாமதமாக வரும் ஊழியர்கள்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
எஸ்.புதூர் : எஸ்.புதூர் பகுதிக்கு குறித்த நேரத்திற்கு பஸ் வசதி இல்லாததால் அரசு ஊழியர்கள் தாமதமாகவே அலுவலகத்துக்கு வர வேண்டியுள்ளதாக குமுறுகின்றனர்.இங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மை, தோட்டக்கலை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலானோர் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தே பணிக்கு வருகின்றனர். குறிப்பாக 200க்கும்


எஸ்.புதூர் : எஸ்.புதூர் பகுதிக்கு குறித்த நேரத்திற்கு பஸ் வசதி இல்லாததால் அரசு ஊழியர்கள் தாமதமாகவே அலுவலகத்துக்கு வர வேண்டியுள்ளதாக குமுறுகின்றனர்.இங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மை, தோட்டக்கலை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலானோர் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தே பணிக்கு வருகின்றனர். குறிப்பாக 200க்கும் மேற்பட்டோர் மதுரை பகுதியில் இருந்து தினமும் வந்து செல்கின்றனர்.

மதுரையில் இருந்து எஸ்.புதூர் வழியாக குறித்த நேரத்தில் பேருந்துகள் இல்லாததால் மூன்று பஸ் வரை மாறி காலை 11:30 மணிக்கு மேல் தான் பலரால் அலுவலகம் வர முடிகிறது. அதேபோல் பணி முடித்து திரும்பி செல்லும் போதும் இதே நிலைமை தான். இதனால் ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட சில துறைகளுக்கு அலுவலர்கள் தினமும் தாமதமாக வர வேண்டியுள்ளது.

அவர்கள் வரும் வரை பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் உள்ளது.எனவே மதுரை எம்.ஜி..ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து காலை 7:30, மற்றும் 8:30 மணிக்கு புறப்படும் வகையில் இரண்டு அரசு பேருந்துகளை புழுதிபட்டி, எஸ்.புதூர், உலகம்பட்டி வழியாக இயக்க அரசு ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொட்டாம்பட்டியில் இருந்து இவ்வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்கவும் வலியுறுத்தினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X