மின் கம்பி அறுந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சிவகங்கை : சிவகங்கை அருகே சாத்தரசன்கோட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து ரோட்டில் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிவகங்கையிலிருந்து இளையான்குடி செல்லும் ரோட்டில் சாத்தரசன்கோட்டை உள்ளது. இங்கு மறவமங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது.தனியார் ஒருவர் மின் கம்பிகளில் மரங்கள்



சிவகங்கை : சிவகங்கை அருகே சாத்தரசன்கோட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து ரோட்டில் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிவகங்கையிலிருந்து இளையான்குடி செல்லும் ரோட்டில் சாத்தரசன்கோட்டை உள்ளது. இங்கு மறவமங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது.

தனியார் ஒருவர் மின் கம்பிகளில் மரங்கள் விழாமல் இருக்க மரக்கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது காலை 11:00 மணிக்கு மின் கம்பி மீது மரக்கிளை விழுந்ததில் மின் கம்பி அறுந்து நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்தது.அறுந்து விழுந்த மின் கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. அங்கிருந்தவர்கள் எச்சரிக்கை விடுத்து இரு புறமும் போக்குவரத்தை நிறுத்தினர்.மறவமங்கலம் துணை மின் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மின் வாரிய அதிகாரிகள் பொதுமக்கள் இணைந்து அறுந்து கிடந்த மின் கம்பியினை அப்புறப்படுத்திய பின்னர் மதியம் 12:00 மணிக்கு பஸ்கள் இயக்கப்பட்டு போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்குப்பின் தொடங்கியது.விவசாயிகள் சங்க தவம்சுந்தரராஜன் தெரிவித்ததாவது: சாத்தரசன்கோட்டையில் மின் கம்பி அறுந்து நடு ரோட்டில் விழுந்தது. விழுந்த கம்பிகளில் இருந்து அடிக்கடி தீப்பொறி பறந்ததால் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இரு புறமும் வாகனங்களில் வருபவர்களை எச்சரிக்கை விடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மறவமங்கலம் துணை மின் நிலைய அதிகாரிகள் வந்துமின் கம்பியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X