வணிக பயன்பாட்டிற்கு கண்மாய் மணல்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சாலைக்கிராமம் : சாலைக்கிராமம் பகுதியில் உள்ள கண்மாய்களிலிருந்து அள்ளப்படும் மண்ணை சிலர் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட இளையான்குடி,சாலைக்கிராமம்,சூராணம், முனைவென்றி உள்ளிட்ட பகுதி கண்மாய்களில் உள்ள மண்ணை விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் அளவிற்கும் அதேபோன்று மண்பாண்ட


சாலைக்கிராமம் : சாலைக்கிராமம் பகுதியில் உள்ள கண்மாய்களிலிருந்து அள்ளப்படும் மண்ணை சிலர் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட இளையான்குடி,சாலைக்கிராமம்,சூராணம், முனைவென்றி உள்ளிட்ட பகுதி கண்மாய்களில் உள்ள மண்ணை விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் அளவிற்கும் அதேபோன்று மண்பாண்ட தொழிலாளர்களும் தங்களது தொழிலுக்கு தேவையான மண்ணை இலவசமாக அள்ளிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதிகளில் உள்ள கண்மாய்களின் மண்ணை சிலர் டிராக்டர் மற்றும் லாரிகளில் அள்ளி வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.விவசாயிகள் சிலர் கூறுகையில், இளையான்குடி, சாலைக்கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நீர் இல்லாத கண்மாய்களில் மணல் விற்கும் சிலர் டிராக்டர் மற்றும் லாரிகளில் பகலிலேயே மணலை அள்ளி செல்கின்றனர்.மேலும் டிராக்டர் ஓட்டுபவர்கள் சிலர் சிறுவர்களாகவும் உள்ளதால் இவர்களால் விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளன. ஆகவே மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் வணிகப் பயன்பாட்டுக்கு மணல் அள்ளுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X