பொதுமக்களை பாதுகாக்க 8 குழுக்கள் அமைப்பு: நாமக்கல் எஸ்.பி., தகவல்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
நாமக்கல்,-'காவிரி கரையோர மக்களை பாதுகாக்கும் வகையில், டி.எஸ்.பி., தலைமையில், 8 குழுக்கள் பணியில் அமர்த்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்' என, எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் பொதுமக்களை

நாமக்கல்,-'காவிரி கரையோர மக்களை பாதுகாக்கும் வகையில், டி.எஸ்.பி., தலைமையில், 8 குழுக்கள் பணியில் அமர்த்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்' என, எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாக்கவும், பொதுமக்கள் யாரும் ஆற்றுக்கு அருகில் செல்லாமல் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குமாரபாளையம், பள்ளிபாளையம், மொளசி, ஜேடர்பாளையம், ப.வேலுார் மற்றும் மோகனுார் போலீஸ் எல்லைக்குட்பட்ட, காவிரி கரையோர பகுதிகளில், டி.எஸ்.பி., தலைமையில், போலீசார், 8 குழுக்களாக பணியில் அமர்த்தப்பட்டு, 24 மணிநேரமும், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், தேசிய பேரிடர் மேலாண் மற்றும் மீட்பு குழுவை சேர்ந்த, 22 பேர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், 40 பேர் ஆகியோர், அனைத்து வகையான மீட்பு உபகரணங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார், வருவாய் மற்றும் தீயணைப்பு துறையினருடன் இணைந்து வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களை வெளியேற்றி, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கின்றனர்.காவிரி கரையோர மக்கள், வெள்ள பாதிப்பு சம்மந்தமாக உதவிகள் தேவைப்படுவோர், போலீஸ் கட்டுபாட்டு அறையை, 04286 -280007 என்ற தொலைபேசி எண்ணிலும், 94981 -81216 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X