ஆற்றோரம் குடியிருப்புகளில் பாதுகாப்பு சுவர்: 'மாஜி' பேட்டி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
பள்ளிபாளையம்,-''பள்ளிபாளையம் ஆற்றோரத்தில் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் வருவதை தடுக்க, பாதுகாப்பு சுவர் அமைக்கப்படும்,'' என்று முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி தெரிவித்தார். காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், பள்ளிபாளையத்தில் கரையோரம் உள்ள ஜனதாநகர், சத்யாநகர், பாவடிதெரு, நாட்டகவுண்டம்புதுார், குமரன்நகர் உள்ளிட்ட பல பகுதி கள்

பள்ளிபாளையம்,-''பள்ளிபாளையம் ஆற்றோரத்தில் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் வருவதை தடுக்க, பாதுகாப்பு சுவர் அமைக்கப்படும்,'' என்று முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி தெரிவித்தார். காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், பள்ளிபாளையத்தில் கரையோரம் உள்ள ஜனதாநகர், சத்யாநகர், பாவடிதெரு, நாட்டகவுண்டம்புதுார், குமரன்நகர் உள்ளிட்ட பல பகுதி கள் பாதிக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்தது. அங்கு வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, நான்கு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதியை பார்வையிட்டு, முகாமில் உள்ளவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறியதாவது: ஆற்றோரத்தில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் செல்வதை தடுக்க, பாதுகாப்பு சுவர் அமைக்கப்படும். ஆவத்திபாளையம் ஓடையின் குறுக்கே உள்ள சிறுபாலம் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. அங்கு உயர்மட்டம் பாலம் அமைக்கப்படும். நான் அமைச்சராக இருந்த போது, கரையோர மக்களில் பலருக்கு இடம் கொடுக்கப்பட்டது. அங்கு யாரும் இதுவரை செல்லவில்லை. அங்கு சென்றால் தான், சாலை, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியும். இவ்வறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X