சின்ன சின்ன செய்திகள்: நாமக்கல்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
மகா மாரியம்மனுக்கு பால்குடம் ஊர்வலம்சேந்தமங்கலம்-சேந்தமங்கலம் அடுத்த முத்துகாபட்டியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பால்குடம் ஊர்வலம் நடந்தது. முத்துகாபட்டி பகுதியைச் சேர்ந்த ஏராமளமான பக்தர்கள், சிவன் கோவிலில் இருந்து முத்துகாபட்டி முக்கிய வீதிகளின் வழியாக பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, மாரியம்மன்

மகா மாரியம்மனுக்கு பால்குடம் ஊர்வலம்சேந்தமங்கலம்-சேந்தமங்கலம் அடுத்த முத்துகாபட்டியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பால்குடம் ஊர்வலம் நடந்தது. முத்துகாபட்டி பகுதியைச் சேர்ந்த ஏராமளமான பக்தர்கள், சிவன் கோவிலில் இருந்து முத்துகாபட்டி முக்கிய வீதிகளின் வழியாக பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, மாரியம்மன் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். மகா மாரியம்மனுக்கு பால் அபி ேஷகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், பக்தர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்நாமக்கல்-விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, கிழக்கு மாவட்ட காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் நடந்தது. மாவட்டத் தலைவர் சித்திக் தலைமை வகித்தார். விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த வேண்டும், வேலையில்லா திண்டாட்டத்ததை போக்க வேண்டும், ஜி.எஸ்.டி., குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பனவற்றை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், முன்னாள் மாவட்ட தலைவர்கள் வீரப்பன், செல்வராஜ், சீனிவாசன், நாமகிரிபேட்டை ஒன்றிய முன்னாள் தலைவர் புள்ளியப்பன், நகர தலைவர் மோகன், மாவட்ட இளைஞர் காங்., தலைவர் கோபால், மாநில ஓ.பி.சி., துணைத்தலைவர் செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இரு தரப்பினர் மோதல்; வழக்கு: 6 பேர் 'அரஸ்ட்'சேந்தமங்கலம்-சேந்தமங்கலம் ரவுண்டானாவில் கொடி கட்டு வது தொடர்பாக, புதிய திராவிட கழகம் கட்சியினருக்கும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். அப்போது ரவுண்டானாவில் கொடி கட்டுவதில் இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, அடிதடி ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் அப்பகுதியில் இருந்த புதிய தமிழகம் கட்சியின் கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை கிழித்து, சேதப்படுத்தியுள்ளனர். இதை, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர், அங்கிருந்த கல், செங்கல், மர ரீப்பர் கட்டை உள்ளிட்டு ஆயுதங்களால், புதிய திராவிட கழக கட்சியினரின் கார், பைக் கண்ணாடிகளை சரமாரியாக அடித்து நொறுக்கினர். சம்பவம் குறித்து சேந்தமங்கலம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க, நாமக்கல் தலைமையிட ஏ.டி.எஸ்.பி,, சேகர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் விசாரணை நடத்தி, கலவரத்தில் ஈடுபட்ட சேந்தமங்கலம் வண்டிபேட்டையைச் சேர்ந்த சீனிவாசன், 50, வல்வில் ஓரி, 35, கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த தங்கமணி, 27, சதீஸ்குமார், 38, ராயனுாரைச் சேர்ந்த அருள்முருகன், 28, பவித்திரத்தைச் சேர்ந்த பிரேம்குமார், 24, ஆகிய, 6 பேரை கைது செய்தனர்.

தேங்காய் பருப்பு ஏலம்:மகா மாரியம்மனுக்கு பால்குடம் ஊர்வலம்சேந்தமங்கலம், ஆக. 6-சேந்தமங்கலம் அடுத்த முத்துகாபட்டியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பால்குடம் ஊர்வலம் நடந்தது. முத்துகாபட்டி பகுதியைச் சேர்ந்த ஏராமளமான பக்தர்கள், சிவன் கோவிலில் இருந்து முத்துகாபட்டி முக்கிய வீதிகளின் வழியாக பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, மாரியம்மன் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். மகா மாரியம்மனுக்கு பால் அபி ேஷகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், பக்தர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்நாமக்கல், ஆக. 6-விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, கிழக்கு மாவட்ட காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் நடந்தது. மாவட்டத் தலைவர் சித்திக் தலைமை வகித்தார். விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த வேண்டும், வேலையில்லா திண்டாட்டத்ததை போக்க வேண்டும், ஜி.எஸ்.டி., குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பனவற்றை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், முன்னாள் மாவட்ட தலைவர்கள் வீரப்பன், செல்வராஜ், சீனிவாசன், நாமகிரிபேட்டை ஒன்றிய முன்னாள் தலைவர் புள்ளியப்பன், நகர தலைவர் மோகன், மாவட்ட இளைஞர் காங்., தலைவர் கோபால், மாநில ஓ.பி.சி., துணைத்தலைவர் செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இரு தரப்பினர் மோதல்வழக்கு: 6 பேர் 'அரஸ்ட்'சேந்தமங்கலம், ஆக. 6-சேந்தமங்கலம் ரவுண்டானாவில் கொடி கட்டு வது தொடர்பாக, புதிய திராவிட கழகம் கட்சியினருக்கும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். அப்போது ரவுண்டானாவில் கொடி கட்டுவதில் இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, அடிதடி ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் அப்பகுதியில் இருந்த புதிய தமிழகம் கட்சியின் கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை கிழித்து, சேதப்படுத்தியுள்ளனர். இதை, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர், அங்கிருந்த கல், செங்கல், மர ரீப்பர் கட்டை உள்ளிட்டு ஆயுதங்களால், புதிய திராவிட கழக கட்சியினரின் கார், பைக் கண்ணாடிகளை சரமாரியாக அடித்து நொறுக்கினர். சம்பவம் குறித்து சேந்தமங்கலம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க, நாமக்கல் தலைமையிட ஏ.டி.எஸ்.பி,, சேகர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் விசாரணை நடத்தி, கலவரத்தில் ஈடுபட்ட சேந்தமங்கலம் வண்டிபேட்டையைச் சேர்ந்த சீனிவாசன், 50, வல்வில் ஓரி, 35, கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த தங்கமணி, 27, சதீஸ்குமார், 38, ராயனுாரைச் சேர்ந்த அருள்முருகன், 28, பவித்திரத்தைச் சேர்ந்த பிரேம்குமார், 24, ஆகிய, 6 பேரை கைது செய்தனர்.

தேங்காய் பருப்பு ஏலம் திருச்செங்கோடு, -திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இதில் முதல் தரம் கிலோ, 72.70 ரூபாய் முதல், 85.70 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம், 54.55 ரூபாய் முதல், 69.05 ரூபாய் வரையிலும் ஏலம் போய், மொத்தம், 50 மூட்டைகள், 1.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. திருச்செங்கோடு -திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இதில் முதல் தரம் கிலோ, 72.70 ரூபாய் முதல், 85.70 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம், 54.55 ரூபாய் முதல், 69.05 ரூபாய் வரையிலும் ஏலம் போய், மொத்தம், 50 மூட்டைகள், 1.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X