டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் வேலைநிறுத்தம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சிவகாசி : திருத்தங்கல் பகுதியில் டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு 3 மாதமாக ஊதியம் வழங்காததால் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் மகளிர் குழு மூலமாக 21 டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் ஊதியம் வழங்கப்படும். இந்நிலையில் இவர்களுக்கு 3 மாதமாக ஊதியம் வழங்காததால் 3 நாட்களாக வேலை



சிவகாசி : திருத்தங்கல் பகுதியில் டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு 3 மாதமாக ஊதியம் வழங்காததால் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் மகளிர் குழு மூலமாக 21 டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் ஊதியம் வழங்கப்படும்.

இந்நிலையில் இவர்களுக்கு 3 மாதமாக ஊதியம் வழங்காததால் 3 நாட்களாக வேலை நிறுத்ததத்தில் ஈடுபட்டு திருத்தங்கல் 1 மண்டல அலுவலகத்தில் இருந்தனர்.டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் கூறுகையில், எங்களுக்கு 3 மாதமாக ஊதியம் வழங்கவில்லை. ஒரு சிலர் குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்துள்ளோம். ஊதியம் வழங்காமல் பள்ளிக்கு கட்டணம் செலுத்த முடியாததால் குழந்தைகள் யாரும் பள்ளிக்குச் செல்லவில்லை. எனவே உடனடியாக ஊதியம் வழங்க கோரி பணியை புறக்கணித்தோம், என்றனர்.மாநகராட்சி மேயர் சங்கீதா அவர்களிடம், இரு நாட்களில் முழுமையான ஊதியம் வழங்கப்படும். நாளையிலிருந்து (இன்று) வழக்கம் போல பணிக்கு செல்ல வேண்டும், என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X