இந்து முன்னணி சார்பில் 200 இடங்களில் விநாயகர் சிலை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கரூர்,-கரூர் மாவட்டத்தில், 200 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.இந்துக்களின் முக்கிய திருவிழாவான விநாயகர் சதுர்த்தி விழா வரும், 31ல் நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. தமிழகத்தில் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை, வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கரூர் மாவட்டத்தில், கரூர் டவுன்,

கரூர்,-கரூர் மாவட்டத்தில், 200 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.இந்துக்களின் முக்கிய திருவிழாவான விநாயகர் சதுர்த்தி விழா வரும், 31ல் நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. தமிழகத்தில் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை, வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கரூர் மாவட்டத்தில், கரூர் டவுன், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், வேலாயுதம்பாளையம், சின்னதாராபுரம், தோகைமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 200 சிலைகள் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.இதுகுறித்து, கரூர் மாவட்ட இந்து முன்னணி பொருளாளர் ரமேஷ்குமார் கூறியதாவது: இந்து முன்னணி சார்பில், க.பரமத்தியில் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டு, மூன்று நாட்களில் காவிரி, அமராவதி ஆறுகளில் சிலைகள் கரைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X