போலீஸ் செய்திகள்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
மெக்கானிக் தற்கொலை: எஸ்.ஐ., மீது புகார்மதுரை: எச்.எம்.எஸ்., காலனி கணேசன் 34. கார் மெக்கானிக். இவரது மனைவி பவித்ரா 27. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 7 வயதில் மகள் உள்ளார். கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பெற்றோர் வீட்டில் பவித்ரா உள்ள நிலையில், கணேசன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்புக்கு பவித்ராதான் காரணம் என்றும், இதன்



மெக்கானிக் தற்கொலை: எஸ்.ஐ., மீது புகார்

மதுரை: எச்.எம்.எஸ்., காலனி கணேசன் 34. கார் மெக்கானிக். இவரது மனைவி பவித்ரா 27. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 7 வயதில் மகள் உள்ளார். கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பெற்றோர் வீட்டில் பவித்ரா உள்ள நிலையில், கணேசன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்புக்கு பவித்ராதான் காரணம் என்றும்,

இதன் பின்னணியில் போலீஸ் எஸ்.ஐ., ஒருவர் உள்ளார் என்றும் கணேசன் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். போதை மாத்திரை: மருந்து கடைக்காரர் கைதுமதுரை: காமராஜர் ரோடு சந்தைப்பேட்டை அருகே மருந்து கடை ஒன்றில் பள்ளி மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட மாத்திரைகள் வழங்கப்படுவதாக தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் மாடசாமிக்கு தகவல் கிடைத்தது. அவர் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டு மாத்திரைகளை பறிமுதல் செய்து உரிமையாளர் தங்கராஜை 53, கைது செய்தனர்.2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்மதுரை: உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வன்னிவேலம்பட்டி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மினி சரக்கு வேன் ஒன்றில் 2000 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர். டிரைவர் சோலையழகுபுரம் ரஞ்சித்குமாரை 30, கைது செய்தனர். உரிமையாளர் மீனாம்பாள்புரம் சுந்தரபாண்டியை தேடி வருகின்றனர். கந்து வட்டி வழக்கில் கைதுமேலுார்: ரங்கசாமிபுரம் அண்ணாத்துரை 55, பெட்டிக்கடை வைத்துள்ளார். நா.கோவில்பட்டி ராமநாதனிடம் 46, கடந்த 2021 ல் ரூ 1.50 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கினார். வட்டி செலுத்திய நிலையில் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 650 கேட்டு மிரட்டல் விடுத்த ராமநாதனை போலீசார் கைது செய்தனர்.

ஆம்புலன்சில் திருட்டு திருமங்கலம்: கப்பலூர் கால்நடை அலுவலகத்தின் ஆம்புலன்ஸ் வாகனத்தை நேற்று முன்தினம் கப்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி அருகே டிரைவர் ஆனந்தன் 31, நிறுத்திச் சென்றார். நேற்று காலை பார்த்த போது ஆம்புலன்ஸின் பேட்டரி திருடு போனது தெரிந்தது. ஆஸ்டின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் பலி திருமங்கலம்: துாத்துக்குடி செல்வகுமார் 48, டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) கள்ளிக்குடி நல்லமநாயக்கன்பட்டி அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி மோதி இறந்தார். பேரையூர் டிரைவர் காளிராஜ் கைது செய்யப்பட்டார்.---------


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X