மதுரை : சுற்றுலா வழிகாட்டிகளுக்கான அடையாள அட்டையைசுற்றுலாத்துறை புதுப்பித்து தராததால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதி மறுக்கப்படுகிறது என வழிகாட்டிகள்வேதனை தெரிவிக்கின்றனர்.மதுரை மாவட்டத்தில் 72 பேர் பயிற்சி பெற்ற சுற்றுலாத்துறை வழிகாட்டிகளாக உள்ளனர். இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை குற்றவழக்கு இல்லை என போலீசார் தடையின்மை சான்று வழங்கிய பின் இத்துறையின் அடையாளஅட்டை புதுப்பித்து தரப்படும்.
கொரோனா ஊரடங்கில் தரப்படவில்லை.தற்போது சுற்றுலாத்துறை பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் இதுவரை புதிய அடையாள அட்டை வழங்கவில்லை. துறையின் தற்காலிக அனுமதி கடிதம் பெற்று அனைத்து கோயில்களுக்கும் சுற்றுலா வழிகாட்டியாக செல்கின்றனர். மீனாட்சியம்மன் கோயிலில் மட்டும் கோயில் நிர்வாகமும், போலீஸ் துறையும் அனுமதி மறுக்கிறது.
புதிய அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே வர வேண்டும் எனக்கூறுவதால் சுற்றுலா பயணிகளுக்கு கோயில் வரலாறு, பெருமையை எடுத்துக் கூற வழி இல்லை. வழிகாட்டிகளுக்கும் வருமான இழப்பும் ஏற்படுகிறது. வழிகாட்டிகளுக்கு உடனடியாக புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்க சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.