மாயனூர் கதவணைக்கு 2.15 லட்சம் கன அடி தண்ணீர் வருகை: மீன் வியாபாரம் 'ஜோர்'

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கரூர்-மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து, 2.15 லட்சம் கன அடியை தாண்டியது. இதனால், அணைப்பகுதிகளில், மீன் வியாபாரம் களை கட்டியுள்ளது.தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பாசன பகுதிகளுக்கு கடந்த மே, 24ல் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு, 3,000 கன அடி முதல் அதிகபட்சமாக, 15 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கர்நாடகா மாநிலத்தில் உள்ள, அணைகளிலிருந்து,

கரூர்-மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து, 2.15 லட்சம் கன அடியை தாண்டியது. இதனால், அணைப்பகுதிகளில், மீன் வியாபாரம் களை கட்டியுள்ளது.தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பாசன பகுதிகளுக்கு கடந்த மே, 24ல் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு, 3,000 கன அடி முதல் அதிகபட்சமாக, 15 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கர்நாடகா மாநிலத்தில் உள்ள, அணைகளிலிருந்து, எதிர்பார்த்த அளவில் தண்ணீர் திறக்கப்படாததால், மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன பகுதிகளுக்கு திறக்கப்பட்ட, தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர், அமராவதி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும், காவிரி யாற்றில் சேர்ந்து, மாயனுார் கதவணைக்கு வந்து சேர்கிறது. இதனால், நேற்று மதியம், 12:00 மணி நிலவரப்படி மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு, இரண்டு லட்சத்து, 15 ஆயிரத்து, 870 கன அடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதிக்கு குறுவை சாகுபடிக்காக, காவிரி யாற்றில், இரண்டு லட்சத்து,14 ஆயிரத்து, 750 கன அடி தண்ணீரும், நான்கு கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. காவிரி பாசன பகுதிகளில் இம்மாதம், சம்பா சாகுபடி துவங்க உள்ள நிலையில், மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு, இரண்டு லட்சத்து, 15 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வரத்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.வியாபாரம் 'சுறுசுறு'மாயனுார் கதவணைக்கு, 2.15 லட்சம் கன அடி தண்ணீர் வரும் நிலையில், மீன்பிடி தொழில் விறுவிறுப்பாக உள்ளது. இதனால், கரூர், நாமக்கல், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று, மீன் வாங்க மாயனுார் கதவணை பகுதியில் குவிந்தனர். பல்வேறு ரக மீன்கள் ஒரு கிலோ, 100 முதல், 150 வரை விற்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X