ஆடு தொழுவமான கல்லுாரி விடுதிமேலாளர், சமையலர் 'சஸ்பெண்ட்'

Added : ஆக 06, 2022 | |
Advertisement
மேலூர் : மேலூர் அரசு கல்லுாரி விடுதியில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து மாணவர் காயமடைந்ததாலும், ஆடு தொழுவமாக மாற்றியதாலும் மேலாளர், சமையலர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.இக்கல்லுாரி விடுதி சிதிலமடைந்து குறித்தும், ஆடுகளை கட்டி வைத்து பராமரிப்பது குறித்தும் நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து மண்டல கல்லுாரி கல்வி இயக்குநர் பசும்பொன்


மேலூர் : மேலூர் அரசு கல்லுாரி விடுதியில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து மாணவர் காயமடைந்ததாலும், ஆடு தொழுவமாக மாற்றியதாலும் மேலாளர், சமையலர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.இக்கல்லுாரி விடுதி சிதிலமடைந்து குறித்தும், ஆடுகளை கட்டி வைத்து பராமரிப்பது குறித்தும் நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதைதொடர்ந்து மண்டல கல்லுாரி கல்வி இயக்குநர் பசும்பொன் முத்துராமலிங்கம், கூடுதல் இயக்குநர் இளங்கோவன், ஆர்.டி.ஓ., பிர்தவுஸ் பாத்திமா, தாசில்தார் இளமுருகன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.கலெக்டர் அனீஷ்சேகர் கூறுகையில், ''விடுதி மாணவர்கள் கல்லுாரியின் புதிய கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆடுகளை கட்டியிருந்த சமையல் மாஸ்டர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். விடுதி தொடர்பான அதிகாரிகள் மீது விசாரணை செய்யப்படும், என்றார்.முதல்வர் மணிமேகலா தேவி கூறுகையில், ''விடுதி மேலாளர் வேல்முருகனும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X