விரிவாக்க பகுதி வார்டுகளில் ரூ.18 கோடியில் 466 ரோடுகள்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
மதுரை : 'மதுரை மாநகராட்சி விரிவாக்க பகுதி வார்டுகளில் ரூ.18 கோடியில் 466தார் ரோடுகள் அமைக்கப்படவுள்ளது' என, அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.மாநகராட்சி விரிவாக்க வார்டுகளில் சில ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. இந்நிலையில் குடிநீர் குழாய்களை இணைக்கும் பணியும் துவங்கியுள்ளது. இரண்டு பணிகளும் சில வார்டுகளில் முடிந்ததால் அங்கு 'வெட் மிக்ஸ் கான்கிரீட்'



மதுரை : 'மதுரை மாநகராட்சி விரிவாக்க பகுதி வார்டுகளில் ரூ.18 கோடியில் 466தார் ரோடுகள் அமைக்கப்படவுள்ளது' என, அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.மாநகராட்சி விரிவாக்க வார்டுகளில் சில ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. இந்நிலையில் குடிநீர் குழாய்களை இணைக்கும் பணியும் துவங்கியுள்ளது. இரண்டு பணிகளும் சில வார்டுகளில் முடிந்ததால் அங்கு 'வெட் மிக்ஸ் கான்கிரீட்' கற்கள் பரப்பி ரோடு சமப்படுத்தப்படுகிறது. சில வார்டுகளில் முக்கிய தெருக்களில் தார் ரோடு அமைக்கப்பட்டுஉள்ளது.

இந்த தொடர் ரோடு பணி சில நாட்களாக நின்று விட்டது.அதிகாரிகள் கூறியதாவது: மழை பெய்வதால் தற்போது ரோட்டில் எந்த இடத்தில் பள்ளம் ஏற்படுகிறது என ஆய்வு செய்கிறோம். அந்த இடத்தில் கூடுதலாக வெட் மிக்ஸ் நிரப்பி மீண்டும் பள்ளம் விழாதபடி சீரமைக்கிறோம். அதற்கு பின் ரோடு முழுவதும் 'வெட் மிக்ஸ்' பரப்புகிறோம்.

இத்துடன் ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள படிக்கட்டுகள், ரேம்ப், காம்பவுண்ட் சுவர் உள்ளிட்ட கட்டுமானங்களை அகற்றி வருகிறோம்.பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பணிகள்முடிந்த விரிவாக்க வார்டுகளில் புதிதாக 466 ரோடுகள் அமைக்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக தார் ரோடு அமைக்கும் பணிகள்துவங்கும். மாசி வீதிகள் உட்பட மழைநீர் தேங்கும்பகுதிகளில் குழாய்கள் பதித்து நீரை கடத்த திட்டமிட்டுள்ளோம். நெடுஞ்சாலை துறை ரோடுகளிலும் குழாய்கள் பதிக்க உள்ளதால் அவர்களிடம் அனுமதி கேட்டுஉள்ளோம், என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X