மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: அதிகாரிகள் ஆய்வு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கிருஷ்ணராயபுரம்-மாயனுார் கதவணைக்கு கூடுதல் நீர்வரத்து காரணமாக, மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீர், இந்த கதவணைக்கு வருகிறது. தற்போது காவிரி ஆற்றில் கூடுதல் நீர் திறப்பு காரணமாக, மாயனுார்

கிருஷ்ணராயபுரம்-மாயனுார் கதவணைக்கு கூடுதல் நீர்வரத்து காரணமாக, மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீர், இந்த கதவணைக்கு வருகிறது. தற்போது காவிரி ஆற்றில் கூடுதல் நீர் திறப்பு காரணமாக, மாயனுார் கதவணைக்கு கூடுதல் நீர் வருகிறது. வரும் தண்ணீரை கதவணை ஷட்டர் மூலம் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனை, மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ், கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று, பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, கரூர் மாவட்ட டி.ஆர்.ஓ., லியாகத், குளித்தலை டி.ஆர்.ஓ., புஷ்பாதேவி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் முருகன், மாயனுார் கதவணை உதவி பொறியாளர் ஸ்ரீதர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X