அமைச்சர் தியாகராஜனுக்கு எதிராக கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
மதுரை : 'அமைச்சர் தியாகராஜனுக்கு எதிராக ஆக.,8ல் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தப் போவதாக' அரசு அலுவலர் ஒன்றிய மதுரை மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அகவிலைப்படி சமூக நீதிக்கு விரோதமானது என்பது உட்பட அரசு அலுவலர், ஆசிரியர்கள் மனம் புண்படும்படி நிதியமைச்சர் தியாகராஜன் பேசி வருகிறார்.அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஆக.,8ல் கருப்பு



மதுரை : 'அமைச்சர் தியாகராஜனுக்கு எதிராக ஆக.,8ல் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தப் போவதாக' அரசு அலுவலர் ஒன்றிய மதுரை மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அகவிலைப்படி சமூக நீதிக்கு விரோதமானது என்பது உட்பட அரசு அலுவலர், ஆசிரியர்கள் மனம் புண்படும்படி நிதியமைச்சர் தியாகராஜன் பேசி வருகிறார்.

அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஆக.,8ல் கருப்பு பேட்ஜ் அணிந்து போராடுகிறோம்.அதேநாளில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, அகவிலைப்படியை உடனே அறிவிப்பது, நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை மீண்டும்வழங்குவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம். ஆக.,20ல் தமிழகம் முழுவதும்அந்தந்த மண்டலங்களில் உண்ணாவிரதம் இருக்கிறோம், என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X