வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை: இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சேலம்-சேலம் கலெக்டர் கார்மேகம் அறிக்கை: மாவட்டத்தில், 10ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி, அதற்கும் மேலாக கல்வித்தகுதி உடையவர், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து, 5 ஆண்டு நிறைவடைந்தும், வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள்; பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறாளி இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது.இத்திட்டத்தில் பயன்பெற

சேலம்-சேலம் கலெக்டர் கார்மேகம் அறிக்கை: மாவட்டத்தில், 10ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி, அதற்கும் மேலாக கல்வித்தகுதி உடையவர், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து, 5 ஆண்டு நிறைவடைந்தும், வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள்; பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறாளி இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது.இத்திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மனுதாரர், 45 வயதுக்குள்ளும், இதர சமூகத்தினர், 40 வயதுக்குள் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தோல்விக்கு, மாதம், 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவருக்கு, 300, மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு, 400, பட்டப்படிப்பு தேர்ச்சி, 600 ரூபாய் வீதம், காலாண்டுக்கு ஒருமுறை, பயனாளி வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.மாற்றுத்திறனாளி, 10ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சிக்கு, 600 ரூபாய், மேல்நிலை கல்வி தேர்ச்சி, 750, பட்டப்படிருப்பு தேர்ச்சி, 1,000 ரூபாய் வீதம் அவரவர் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும். வேலை வாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காட்டி, மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பம் பெறலாம். தவிர, www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X