ஏற்காடு-ஏற்காட்டில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால், மலைக்கிராம சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து, அங்குள்ள கிராமப்பகுதி ஓடைகளில், மழைநீர் அதிக அளவில் சென்றது. அந்த நீரில் அடித்து வந்த கற்கள் சாலையில் கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், அந்த கற்களை அகற்றும் பணி நடந்தது. மேலும், மலைப்பாதைகளில் ஆங்காங்கே அருவிகள் தோன்றி, அதிகளவில் தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் ஏற்காடு வந்த சுற்றுலா பயணியர், அருவிகளை பார்த்ததோடு, குளித்தும் மகிழ்ந்தனர்.சில நாளாக பெய்த மழையால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவியது. இதனால் பனிமூட்டமாக காட்சி அளித்தது. வாகன ஓட்டிகள், முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர். குடிநீர் வினியோகம் பாதிப்புமல்லுார் டவுன் பஞ்சாயத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்களுக்கு ராசிபுரம் - பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில், தினமும், 13 லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால், காவிரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பூலாம்பட்டி நீ நீரேற்றும் நிலையத்தை, தண்ணீர் சூழ்ந்தது. மின் மோட்டாரை இயக்க முடியாததால், நேற்று முதல், 'பம்பிங்' செய்ய முடியவில்லை. இதனால், மல்லுாருக்கு குடிநீர் வரவில்லை. உள்ளுர் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.