சின்ன சின்ன செய்திகள்: சேலம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கோர்ட்டில் ஆஜராகாதவர் வளைப்புசேலம்: வீராணம், மேட்டுப்பட்டி தாதனுாரை சேர்ந்தவர் செல்வமணி, 29. இவரை, அதே பகுதியில், 2016ல் நடந்த கொலை வழக்கில், வீராணம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்த அவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்த நிலையில், நேற்று மதியம், அவர் வசிக்கும் பகுதியில், வீராணம் போலீசார் கைது

கோர்ட்டில் ஆஜராகாதவர் வளைப்புசேலம்: வீராணம், மேட்டுப்பட்டி தாதனுாரை சேர்ந்தவர் செல்வமணி, 29. இவரை, அதே பகுதியில், 2016ல் நடந்த கொலை வழக்கில், வீராணம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்த அவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்த நிலையில், நேற்று மதியம், அவர் வசிக்கும் பகுதியில், வீராணம் போலீசார் கைது செய்தனர்.சாராயம் கடத்திய 3 பேர் சிக்கினர்ஆத்துார்: கல்வராயன் மலைப்பகுதியில் கல்பகனுார், ராமநாயக்கன்பாளையம் வழியே, தலைச்சுமையாக சாராயம் கடத்துவதாக தகவல் கிடைத்ததால், நேற்று ஆத்துார் ஊரக போலீசார், ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, சாராயம் கடத்தி வந்த, கல்வராயன்மலை, பாச்சாடு சந்திரன், 28, கல்பகனுார், வன்னியபுரம் பொன்னுதுரை, 59, செந்தில்குமார், 47, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம், 300 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்சேலம்: சேலத்தில் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து, கமிஷனர் நஜ்முல் ேஹாதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி கட்டுப்பாட்டு அறை சம்பங்கி, டவுன் குற்றப்பிரிவுக்கும், கன்னங்குறிச்சி ராமகிருஷ்ணன், அன்னதானப்பட்டி ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து, சேலம் மாநகருக்கு இடமாற்றம் பெற்று காத்திருப்போர் பட்டியலில் இருந்த மோகன்பாபு கண்ணா, சேலம் டவுன் சட்டம் ஒழுங்குக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் சண்முகசுந்தரம் செவ்வாய்ப்பேட்டை; செல்வராஜ் கன்னங்குறிச்சி; சசிகலா இரும்பாலை; விக்னேஷ்வரன் கருப்பூர்; விஜயேந்திரன் அழகாபுரத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.சிறுமி கர்ப்பம்: வாலிபர் கைதுவாழப்பாடி: இந்திரா நகரை சேர்ந்த, 16 வயது சிறுமியை, 7 மாதங்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த விருபாண்டி என்பவர், திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து பலாத்காரம் செய்தார். இதனால் சிறுமி கர்ப்பமாக உள்ளதாக, அவரது தாய், வாழப்பாடி போலீசில், கடந்த பிப்., 20ல் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று, அச்சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி, 21, என்பவரும், பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக புகார் அளித்தார். இதனால், வாழப்பாடி போலீசார், வெள்ளியங்கிரி மீது 'போக்சோ' வழக்குப்பதிந்து, நேற்று கைது செய்தனர்.மதுக்கடை முன் பைக் 'அபேஸ்'சேலம்: செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் சேகர், 40. இவர், 'டியோ' மொபட்டை, கடந்த, 31 இரவு, சந்தைப்பேட்டை மதுக்கடை முன் நிறுத்தி விட்டு, அருகில் உள்ள கடைக்கு சென்றார். திரும்பி வந்தபோது, மொபட்டை காணவில்லை. செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X