கண்மாய்களில் மண் எடுக்க 213 விவசாயிகளுக்கு அனுமதி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 706 கண்மாய்களில் வண்டல் மண் அள்ள இதுவரை 213 விவசாயிகளுக்கு வருவாய்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கண்மாய்கள் துார்வாரப்படாமல் நீர்பிடிப்பு பகுதிகள் மண்மேவி மேடாகி உள்ளன. இதனையடுத்து, விளைநிலத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகள் கண்மாய்களில் இலவசமாக வண்டல் மண் அள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, தாலுகா அலுவலகத்தில் பட்டா, சிட்டா, அடங்கல் விபரங்களுடன் விண்ணப்பித்துள்ள 213 விவசாயிகளுக்கு மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கண்மாய் வண்டல் மண் விளைநிலத்தில் இடுவதால் மண்ணின் வளம் மேம்படும். பொதுப்பணித்துறை -200, ஊரகவளர்ச்சிதுறை- 506 என மொத்தம் 706 கண்மாய்களில் மண் அள்ளலாம்.

வருவாய்துறை, கனிமவளத்துறையினர் ஆவணங்களை ஆய்வு விவசாயிகளுக்கு அனுமதி தருகின்றனர். இதுவரை 3196 கனஅடி அளவிற்கு கண்மாய்களில் மண் அள்ளியுள்ளனர். இறவை சாகுபடிக்கு ஒருஏக்கருக்கு 90 கனஅடி, மானாவாரிக்கு 75 கனஅடி வரை மண் எடுக்கலாம். இவ்வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X