சின்ன சின்ன செய்திகள்: ஈரோடு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
காங்., கண்டன ஆர்ப்பாட்டம்பெருந்துறை,-விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத திண்டாட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும், பெருந்துறை, ஊத்துக்குளி மற்றும் சென்னிமலை வட்டார காங்., சார்பில், பெருந்துறை புதுபஸ் ஸ்டாண்ட் அருகில், ஆர்ப்பாட்டம் நடந்தது. பெருந்துறை தெற்கு வட்டார தலைவர் சுப்பிரமணி தலைமையில், திரளான கட்சியினர் கலந்து

காங்., கண்டன ஆர்ப்பாட்டம்பெருந்துறை,-விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத திண்டாட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும், பெருந்துறை, ஊத்துக்குளி மற்றும் சென்னிமலை வட்டார காங்., சார்பில், பெருந்துறை புதுபஸ் ஸ்டாண்ட் அருகில், ஆர்ப்பாட்டம் நடந்தது. பெருந்துறை தெற்கு வட்டார தலைவர் சுப்பிரமணி தலைமையில், திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்.*ஜி.எஸ்.டி., வரி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, கோபி நகர காங்., சார்பில், கோபியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சரவணன், நகர தலைவர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் டி.ஜி.,புதுாரிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆட்டோ டிரைவர் விபத்தில் பலிகோபி-கோபி அருகே ஒத்தக்குதிரையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 43. டிரைவர்; தனது சரக்கு ஆட்டோவில், திருப்பூர் சாலையில், வடுகபாளையம் அருகே, நேற்று முன்தினம் இரவு சென்றார். சாலையோர புளியமரத்தில் சரக்கு ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவர் மனைவி ரதிதேவி புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
கடையில் திருடிய மூவர் கைதுபுன்செய்புளியம்பட்டி-புன்செய்புளியம்பட்டியை அடுத்த விண்ணப்பள்ளியை சேர்ந்தவர் சிவபிரசாத், 28; சத்தி சாலையில் ஜெராக்ஸ் மற்றும் பேன்ஸி கடை வைத்துள்ளார். கடையின் ஆஸ்பெட்டாஸ் சீட் கூரையை உடைத்து, 5,000 ரூபாய் சில நாட்களுக்கு முன் திருட்டு போனது. இது தொடர்பாக கோவை, சூலுாரை சேர்ந்த பிரகாஷ், 33; பாப்பம்பட்டி பிரபு, 27; கோவை, அன்னுார அடுத்த செல்லனுாரை சேர்ந்த பிரகாஷ், 27, ஆகியோரை நேற்று கைது செய்தனர். சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சத்தி கிளை சிறையில் நேற்று அடைத்தனர். இவர்கள் மூவரும் ஏற்கனவே, கோவை மற்றும் சத்தி பகுதியில், வீடுகளில் கைவரிசை காட்டியதும் தெரிய வந்துள்ளது.
இடி தாக்கிய கோவிலில் பூஜை பெருந்துறை-பெருந்துறை பகுதியில் கடந்த ஜூலை மாதம், ௩1ம் தேதி இரவு, இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதில் பெருந்துறை புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண கோவில் கோபுரத்தை இடி தாக்கியது. இதில் சிலைகள் சேதமடைந்தன. இதனால் கோவிலில் தினசரி பூஜை நிறுத்தப்பட்டது. கோவிலில் நேற்று முன்தினம் இரவு, பரிகார பூஜை தொடங்கியது. நேற்றும் கர்மாங்க ஸ்நாபனம், 81 கலச பூஜை, ஆராதனை நடந்தது.
உணவு தந்த அ.தி.மு.க.,ஆறுதல் சொன்ன தி.மு.க.,பவானி-காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பவானியில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு, பவானியில் பல்வேறு இடங்களில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் கந்தன்பட்டறையில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, பவானி எம்.எல்.ஏ., கருப்பணன் மற்றும் கட்சியினர், நேற்று காலை உணவு வழங்கி, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர். தி.மு.க.,வினர் மக்களுக்கு ஆறுதல் கூறி சென்றனர்.
ஜீவன் ரக்ஷா பதக்க விருது;விண்ணப்பிக்க அழைப்புஈரோடு-நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்து, தீ விபத்து, நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு போன்றவற்றின்போது மனித உயிர்களை மீட்பவர்களுக்கு, மத்திய அரசு சார்பில் ஜீவன் ரக்ஷா பதக்க விருது வழங்கப்படுகிறது. கடந்த, 2021ம் ஆண்டுக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம். கடந்த, 2020 அக்., 1ம் தேதிக்கு முன், இரண்டு ஆண்டுகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மட்டுமே இவ்விருது வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் விபரங்கள், www.jvp.mha.gov.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். வரும், 10க்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
ஈரோடு, நம்பியூரில் 48 மி.மீ., மழை ஈரோடு-ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக பல இடங்களில் மழை பெய்தது.அதிகபட்சமாக ஈரோடு மற்றும் நம்பியூரில், ௪௮ மி.மீ., மழை பதிவானது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): மொடக்குறிச்சி-28, குண்டேரிபள்ளம்-22.2, இலந்தைகுட்டைமேடு-19.6, சென்னிமலை-17, தாளவாடி-11, கவுந்தப்பாடி-8, சத்தியமங்கலம்-6, பெருந்துறை-6, பவானிசாகர்-4.8, கொடிவேரி-4.2, வரட்டுப்பள்ளம்-4.2, கோபி-2, அம்மாபேட்டை-1.2 மி.மீட்டர் மழை பதிவானது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X