கே.ஆர்.பி., அணை தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு 2வது நாளாக பொதுமக்கள் வர தடை விதிப்பு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கிருஷ்ணகிரி-கே.ஆர்.பி., அணை தரைப்பாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இரண்டாவது நாளாக பொதுமக்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரால், கிருஷ்ணகிரி


கிருஷ்ணகிரி-கே.ஆர்.பி., அணை தரைப்பாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இரண்டாவது நாளாக பொதுமக்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. ஆனால், தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்யாததால், நேற்று கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து குறைந்தது. நேற்று காலை, 5,735 கன அடிநீர் வந்து கொண்டிருந்த நிலையில், மதியம், 4,700 கன அடியாக நீர்வரத்து குறைந்தது.இதனால் காலை, 7,549 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டிருந்த நிலையில் மதியம், 5,200 கன அடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 49.40 அடியாக நீர்மட்டம் இருந்தது.மாவட்டத்தில் மழை தொடர்வதால், கே.ஆர்.பி., அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும், இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரையில் வசிக்கும், 5 மாவட்ட மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். கே.ஆர்.பி., அணையின் தரைப்பாலத்தில் வெள்ளம் சென்று கொண்டிருப்பதால், இரண்டாவது நாளாக நேற்றும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X