அரசு கலைக் கல்லூரிகளில் கலந்தாய்வு துவங்கியது

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கிருஷ்ணகிரி-கிருஷ்ணகிரி மாவட்ட அரசு கலைக்கல்லுாரிகளில் இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு கூட்டம் தொடங்கியது.கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லுாரி, அரசு மகளிர் கலைக்கல்லுாரி, பர்கூர் அரசு மகளிர் கல்லுாரிகளில் இளநிலை முதலாமாண்டு சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு கூட்டத்தில் நேற்று சிறப்பு பிரிவினரான முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, மாற்றுத்திறனாளி, தேசிய


கிருஷ்ணகிரி-கிருஷ்ணகிரி மாவட்ட அரசு கலைக்கல்லுாரிகளில் இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு கூட்டம் தொடங்கியது.கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லுாரி, அரசு மகளிர் கலைக்கல்லுாரி, பர்கூர் அரசு மகளிர் கல்லுாரிகளில் இளநிலை முதலாமாண்டு சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு கூட்டத்தில் நேற்று சிறப்பு பிரிவினரான முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, மாற்றுத்திறனாளி, தேசிய மாணவர் படை, விளையாட்டு பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர். வரும், 10ல் பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், உணவு மற்றும் ஊட்டச்சத்தியல், மின்னணுவியல், கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் பிரிவுகளுக்கும், 11ல் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவு களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. அடுத்தடுத்த நாட்களில் மற்ற பிரிவுகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மின்னஞ்சல், குறுந்தகவல், தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும்.கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ் மற்றும் இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம், மாணவர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டையும் எடுத்து வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த கல்லுாரி முதல்வரை அணுகலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X