சின்ன சின்ன செய்திகள்: கிருஷ்ணகிரி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
13 வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாறுதல்காரிமங்கலம்-காரிமங்கலம் தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்த வி.ஏ.ஓ.,க்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில், காரிமங்கலத்தில் பணிபுரிந்த வி.ஏ.ஓ., எலுமிச்சனஹள்ளிக்கும்; இங்கு பணிபுரிந்த வி.ஏ.ஓ., காரிமங்கலத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதேபோல், 13 வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.பஸ் டயர் வெடித்து 4

13 வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாறுதல்காரிமங்கலம்-காரிமங்கலம் தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்த வி.ஏ.ஓ.,க்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில், காரிமங்கலத்தில் பணிபுரிந்த வி.ஏ.ஓ., எலுமிச்சனஹள்ளிக்கும்; இங்கு பணிபுரிந்த வி.ஏ.ஓ., காரிமங்கலத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதேபோல், 13 வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.பஸ் டயர் வெடித்து 4 பெண்கள் காயம்ஏரியூர்- பென்னாகரம்--மேச்சேரிக்கு, ஏரியூர் வழியாக நேற்று, அரசு பஸ் ஒன்று சென்றது. டிரைவர் குமார் பஸ்சை ஓட்டினார். கண்டக்டராக ராசு பணிபுரிந்தார். பத்ரஹள்ளி பஞ்.,க்குட்பட்ட பந்தல்மேடு பஸ் ஸ்டாப் அருகே பஸ் சென்று கொண்டிருந்தத. அப்போது, பயங்கர சத்தத்துடன் பஸ்சின் பின்பக்க டயர் வெடித்தது.இதில், பஸ்சில் பயணிகள் பெரும்பாலையை சேர்ந்த அமுதா, மணிமேகலை, மேகலா, விஜயா ஆகிய, 4 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து, ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர். வாகனம் மோதியதில் விவசாயி பலிநல்லம்பள்ளி,- தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அடுத்த கக்கன்ஜிபுரத்தை சேர்ந்தவர் முருகேசன், 47; விவசாயி. இவர் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தடங்கம் மேம்பாலம் அருகே சாலையை கடக்க நடந்து சென்றுள்ளார். அப்போது, இச்சலையில் அடையாளம் தெரியாத வேகமாக வந்த வாகனம் அவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.பேக்கரி கடையில்பூட்டை உடைத்து திருட்டுஊத்தங்கரை- ஊத்தங்கரை அடுத்த, சென்னப்பநாயக்கனுார் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருபவர் ரேக்கா,28. இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். காலையில் வந்து பார்த்தபோது, கடையை உடைத்து, உண்டியல் மற்றும் கல்லாப்பெட்டியில் இருந்த, 7,000 ரூபாயை திருடி சென்றது தெரியவந்தது.ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தார். கடையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி., கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X