இ.கம்யூ., பஞ்., தலைவர் கொலை: பஞ்., செயலர் உட்பட 11 பேர் கைது

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ஓசூர்,-தளி அருகே நடந்த இ.கம்யூ., கட்சி பஞ்., தலைவர் கொலையில், பஞ்., செயலர் உட்பட, 11 பேர் கைது செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த பி.பி.,பாளையத்தை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி, 46. இ.கம்யூ., கட்சி முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் மற்றும் தாரவேந்திரம் பஞ்., தலைவர்; கடந்த, 2ம் தேதி இரவு தளியில் காய்கறி வாங்கி கொண்டு, ஊருக்கு பைக்கில் சென்றார். அப்போது பின்தொடர்ந்து சென்ற

ஓசூர்,-தளி அருகே நடந்த இ.கம்யூ., கட்சி பஞ்., தலைவர் கொலையில், பஞ்., செயலர் உட்பட, 11 பேர் கைது செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த பி.பி.,பாளையத்தை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி, 46. இ.கம்யூ., கட்சி முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் மற்றும் தாரவேந்திரம் பஞ்., தலைவர்; கடந்த, 2ம் தேதி இரவு தளியில் காய்கறி வாங்கி கொண்டு, ஊருக்கு பைக்கில் சென்றார். அப்போது பின்தொடர்ந்து சென்ற மர்ம கும்பல், தளி கொத்தனுார் - பி.பி.,பாளையம் இடையே வைத்து, அவரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றது. இது தொடர்பாக, தளி போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த, 3ம் தேதி சேலம் மாவட்டம், ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனில் பி.பி.,பாளையத்தை சேர்ந்த தாரவேந்திரம் பஞ்., துணைத்தலைவி சாக்கம்மா மகன் திம்மையா என்ற ரவி, 38, பெரிய மல்லசோனையை சேர்ந்த சிவமல்லையா என்ற கரியன், 27, ஆகிய இருவர் சரணடைந்தனர். அவர்களை தளி போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், இந்த கொலையில் தொடர்புடைய திம்மையாவின் தம்பிகளான கிருஷ்ணா, 36, சங்கரப்பா என்ற சங்கர், 30, மாதேஷ், 29, மற்றும் பி.பி.,பாளையத்தை சேர்ந்த தியாகராஜ், 22, பெரிய மல்லசோனையை சேர்ந்த புட்டமாரி, 31, தளி கொத்தனுாரை சேர்ந்த மல்லேஷ், 25, மற்றும் தாரவேந்திரம் பஞ்., செயலரான காளேநட்டியை சேர்ந்த பிரசன்னா, 48, கக்கதாசத்தை சேர்ந்த ராகேஷ், 21, முனிராஜ், 25, ஆகிய, 9 பேரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கூறும் போது, 'திம்மையா குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை, கொலையான நரசிம்மமூர்த்தி முன் நின்று, தனியார் நிறுவனத்திற்கு கடந்த, 2014 ல் விற்று கொடுத்தார். இதில், விற்பனை செய்த உரிய பணத்தை தரவில்லை என கூறி, திம்மையா குடும்பத்தினர் நரசிம்மமூர்த்தியிடம் தொடர்ந்து கேட்டு வந்தனர். பணத்தை கேட்டு வந்த திம்மையாவின் தந்தையும் சமீபத்தில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இதற்கிடையே, பஞ்.,ல் நிர்வாக பிரச்னையும் ஏற்பட்டது. இதனால் திம்மையா மற்றும் அவரது தம்பிகள் உட்பட அனைவரும் சேர்ந்து, நரசிம்மமூர்த்தியை கொலை செய்தனர்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X