தீராத தலைவலி: வாலிபர் விபரீதம்கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த ராஜிகுட்டையை சேர்ந்தவர் வெங்கடேஷ், 19; விவசாயி. இவருக்கு கடந்த சில மாதங்களாக தொடர் தலைவலி இருந்து வந்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும் குணமாகாத விரக்தியில் கடந்த ஜூலை, 27ல், வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.தவறி விழுந்த பெண் பலிஓசூர்: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சாந்தன் மனைவி கவுரி, 30; ஓசூர் அடுத்த பாகலுார் அருகே சொக்கநாதபுரத்தில், கணவருடன் தங்கியிருந்தார். கடந்த, 3ம் தேதி மதியம், சொக்கநாதபுரத்தில் உள்ள செங்கல்சூளையில் நடந்து சென்ற கவுரி, திடீரென தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.நிலம் பிரிப்பதில் தகராறுஅண்ணன், தம்பி உட்பட 5 பேர் கைதுகிருஷ்ணகிரி: பூவத்தி அடுத்த பண்ணகொள்ளையை சேர்ந்தவர் கோவிந்தன், 46. தும்பலபள்ளியை சேர்ந்தவர் முனுசாமி, 65. சகோதரர்களான இவர்களுக்குள் தும்மலபள்ளியில் உள்ள அவர்களது மூதாதையர் நிலத்தை பிரிப்பதில் தகராறு இருந்துள்ளது.கடந்த ஜூலை, 31ல் ஏற்பட்ட மோதலில் கோவிந்தனை முனுசாமி தாக்கியுள்ளார். கோவிந்தன் புகார்படி கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் முனுசாமியை கைது செய்தனர். அதேபோல முனுசாமி தன்னை தாக்கியதாக அளித்த புகார்படி அவரது சகோதரர்களான சுந்தரம், 50, கோவிந்தன், 46, துரைசாமி, 45, அவரது மகன் கெகதீஷ், 19, ஆகிய நால்வரையும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கைது செய்தனர்.புகையிலை பொருட்கள் விற்றவர் கைதுஓசூர்:ஓசூர் அடுத்த பாகலுார் ஸ்டேஷன் எஸ்.ஐ., கனிமொழி மற்றும் போலீசார், சத்தியமங்கலம் பகுதியில் ரோந்து சென்ற போது, அங்கிருந்த பெட்டிக்கடையில், புகையிலை பொருட்களை விற்பது தெரிந்தது. இதனால், கடையில் இருந்த அப்பகுதியை சேர்ந்த வெங்கடப்பா, 42, என்பவரை கைது செய்த போலீசார், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.மனைவியுடன் தகராறு; கணவர் விபரீதம்கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ரயில்வே காலனியை சேர்ந்தவர் பிரகாஷ், 29; கூலி தொழிலாளி. தன் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பிரகாஷ், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.மழைக்கு கிணற்றில் விழுந்த வீடுபாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் கடந்த,10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து நிலத்தின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுவதால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மகேந்திரமங்கலம் கிராமத்தில் தகரசீட்டு வீட்டில் குடியிருந்து வந்த கூலி தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி,65, என்பவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இவரது வீட்டின் அருகே இருந்த கிணற்றில் மண்சரிவு ஏற்பட்டு வீடு கிணற்றில் சரிந்தது; வீட்டிலிருந்த கிருஷ்ணமூர்த்தியும் நீரில்மூழ்கினார்.கிணற்றில் மூழ்கிய கிருஷ்ணமூர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கிருஷ்ணமூர்த்தியை உயிருடன் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.கார் மோதியதில் வாலிபர் பலிகாரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி காமராஜ் நகரை சேர்ந்த குமரேசன்,34; இவர் நேற்று முன்தினம் அவரது பைக்கில் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றுக்கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த டாடாஇண்டிகா கார் பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த குமரேசனை, மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.நாட்டுக் கோழிகள் திருட்டுஅரூர்: அரூர் அடுத்த மாம்பட்டி காந்தி நகரைச் சேர்ந்தவர் கண்ணதாசன், 40; ராணுவ வீரர். தற்போது, விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இவரது விவசாய நிலத்தில் கூண்டுகள் அமைத்து நாட்டுக்கோழிகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 2ம் தேதி இரவு, 2:00 மணிக்கு கண்ணதாசன் எழுந்து வந்து பார்த்தபோது, கூண்டில் இருந்த, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 20 நாட்டுக்கோழிகளை காணவில்லை. புகாரின்படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.