பாதுகாப்பு முகாமில் உள்ளோருக்கு அ.தி.மு.க., மாஜி உணவு வழங்கல்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
பள்ளிபாளையம்-மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையம் கரையோரத்தில், 200க்கு மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்தது. அங்கு வசிக்கும், 450க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, ஆவாரங்காடு, ஓங்காளியம்மன் கோவில் மண்டம், சந்தைபேட்டை, அக்ரஹாரம் ஆகிய இடங்களில் உள்ள பாதுகாப்பு முகாம்களில்

பள்ளிபாளையம்-மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையம் கரையோரத்தில், 200க்கு மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்தது. அங்கு வசிக்கும், 450க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, ஆவாரங்காடு, ஓங்காளியம்மன் கோவில் மண்டம், சந்தைபேட்டை, அக்ரஹாரம் ஆகிய இடங்களில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, நேற்று அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி உணவு வழங்கினார். மேலும், தண்ணீர் குறையும் வரை, தொடர்ந்து மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் என்றும் அப்போது தெரிவித்தார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் வெள்ளிங்கிரி, பேரவை செயலாளர் சுப்ரமணி, ஒன்றிய செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். * பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை அடுத்த பட்லுார் ஆற்றோரம் பகுதியில், 25 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்டு, அங்குள்ள அரசுப்பள்ளியில் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர், தங்கமணி, நேற்று அரிசி, பருப்பு வழங்கி ஆறுதல் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X