நாமக்கல்லில் இருந்து ராமேஸ்வரத்துக்கு நேரடி ரயில் சேவை: இன்று துவக்கம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
நாமக்கல்,-'நாமக்கல்லில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சனிக்கிழமைகளில் நேரடி ரயில் சேவை உள்ளது. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் இருந்து வாரம்தோறும், சனிக்கிழமைகளில், காலை, 6:30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில்,

நாமக்கல்,-'நாமக்கல்லில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சனிக்கிழமைகளில் நேரடி ரயில் சேவை உள்ளது. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் இருந்து வாரம்தோறும், சனிக்கிழமைகளில், காலை, 6:30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், இரவு, 8:45 மணிக்கு, நாமக்கல் ரயில் நிலையம் வருகிறது. மறுநாள் காலை, 6:15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது. மீண்டும், இரவு, 9:00 மணிக்கு ராமேஸ்வரத்தில் புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை, (திங்கள்) 4:20 மணிக்கு, நாமக்கல் வந்து சேருகிறது. அதன்பிறகு, சேலம், பெங்களூரு வழியாக, அன்று இரவு, 7:25 மணிக்கு, ஹூப்ளியை சென்றடைகிறது. இந்த ரயில் சேவை இன்று துவங்குகிறது.விடுமுறை நாளில் இயக்கப்படும் இந்த ராமேஸ்வரம் சிறப்பு ரயிலை, நாமக்கல் மாவட்ட பொதுமக்கள், பக்தர்கள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிக அளவில் பயணிகள் ஏறும்பட்சத்தில், ஹூப்ளி-ராமேஸ்வரம் சிறப்பு ரயில், நிரந்தர ரயிலாக மாற வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X