வகுப்பை புறக்கணித்த மாணவர்கள்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
எருமப்பட்டி,-போடிநாய்க்கன்பட்டி அரசு பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால், மழையில் நனைந்தபடி மரத்தடியில் பாடம் கற்க முடியாமல், மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். எருமப்பட்டி அருகே போடிநாய்க்கன்பட்டியில் அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஒரே இடத்தில் செயல்படுகிறது. இங்கு துவக்கப் பள்ளியில், 200 மாணவர்களும், உயர்நிலைப்பள்ளியில், 150

எருமப்பட்டி,-போடிநாய்க்கன்பட்டி அரசு பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால், மழையில் நனைந்தபடி மரத்தடியில் பாடம் கற்க முடியாமல், மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். எருமப்பட்டி அருகே போடிநாய்க்கன்பட்டியில் அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஒரே இடத்தில் செயல்படுகிறது. இங்கு துவக்கப் பள்ளியில், 200 மாணவர்களும், உயர்நிலைப்பள்ளியில், 150 மாணவர்கள் என, 350 பேர் படிக்கின்றனர். இங்கு, ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக, 6 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. மீதம் உள்ள, 5க்கும் மேற்பட்ட வகுப்புகள், பல ஆண்டுகளாக, பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் தான் தினமும் நடக்கின்றன. இதனால் கடும் வெயிலிலும் மாணவர்கள் மரத்தடியில் உட்கார்ந்து படித்து வந்தனர். கடந்த சில நாட்களாக எருமப்பட்டி பகுதியில், பகல் நேரத்திலும் மழை பெய்து வருவதால், வேறு வழியின்றி, மாணவர்களை வெளியே உட்கார வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி உள்ளனர். மழையில் நனைந்ததால், ஆசிரியர்கள் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவர்கள், நேற்று பள்ளி முன் தர்ணா போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த பெற்றோர், மழையில் வகுப்புகள் நடத்துவதை கண்டித்து, ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தங்களின் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: கடந்த, 7 ஆண்டுகளாக பள்ளியில் இட பற்றாக்குறை உள்ளது. பலமுறை கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என கோரிக்கை விடுத்தும், இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு புதிய வ‍குப்பறைகள் கட்டும் பணியை அதிகாரிகள் மெத்தனமாக செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X