மண்டலபிஷேக விழா

Added : ஆக 06, 2022 | |
Advertisement
பரமக்குடி : பரமக்குடி நகராட்சி மஞ்சள்பட்டணம் சித்தி விநாயகர் கோயில் மண்டல அபிஷேக விழா நடந்தது.கோயிலில் ஜூன் 16ல் நான்கு கால யாக பூஜைகள் நிறைவடைந்து மகா கும்பாபிஷேகம்நடந்தது. அன்று முதல் தினமும் காலையில் மண்டல பூஜை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்நடந்தன. மண்டல பூஜை நிறைவு நாளன்று காலை சிறப்பு ஹோமங்கள் நிறைவடைந்து பூர்ணாஹூதி நடந்தது.தொடர்ந்து விநாயகருக்கு கலச



பரமக்குடி : பரமக்குடி நகராட்சி மஞ்சள்பட்டணம் சித்தி விநாயகர் கோயில் மண்டல அபிஷேக விழா நடந்தது.கோயிலில் ஜூன் 16ல் நான்கு கால யாக பூஜைகள் நிறைவடைந்து மகா கும்பாபிஷேகம்நடந்தது. அன்று முதல் தினமும் காலையில் மண்டல பூஜை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்நடந்தன. மண்டல பூஜை நிறைவு நாளன்று காலை சிறப்பு ஹோமங்கள் நிறைவடைந்து பூர்ணாஹூதி நடந்தது.தொடர்ந்து விநாயகருக்கு கலச அபிஷேகம்நடத்தப்பட்டு, தீபாரதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் நிர்வாகிகள் வக்கீல் ராமதாஸ், ராமலிங்கம், முத்துச்சாமி, கனகராஜ் பங்கேற்றனர்.சேதுக்கரை: சேதுக்கரை அருகே பாப்பாத்தி காளியம்மன் கோயிலில் ஜூன் 19ல் கும்பாபிஷேகம் நடந்தது.48 நாட்கள் நிறைவானதால் மண்டலபிஷேக பூஜையை முன்னிட்டு கோயிலில் யாகசாலை பூஜை உள்ளிட்ட ஹோம வேள்விகள் நடந்தது.

மூலவர் பாப்பாத்தி காளியம்மன், கருப்பணசாமி, மாடசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தரிசனம் செய்தனர்.பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பூஜாரி முருகாண்டி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X