வங்கிகளுக்கு வட்டி அதிகரிப்பு; தொழில் துறையை பாதிக்கும்| Dinamalar

வங்கிகளுக்கு வட்டி அதிகரிப்பு; தொழில் துறையை பாதிக்கும்

Added : ஆக 06, 2022 | |
மதுரை : 'மத்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கு விதிக்கும் வட்டி விகிதத்தை 5.40 சதவீதம் அதிகரித்திருப்பதுதொழில் வணிகத் துறையை, மக்களை பாதிக்கும்' என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: மத்திய ரிசர்வ் வங்கி 2022--23 நிதியாண்டில் ரெப்போ விகிதத்தை 5.40 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை



மதுரை : 'மத்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கு விதிக்கும் வட்டி விகிதத்தை 5.40 சதவீதம் அதிகரித்திருப்பதுதொழில் வணிகத் துறையை, மக்களை பாதிக்கும்' என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: மத்திய ரிசர்வ் வங்கி 2022--23 நிதியாண்டில் ரெப்போ விகிதத்தை 5.40 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், ஜி.டி.பி., மாற்றம் இல்லை. இந்நிலையில் ரெப்போ விகிதம் மட்டும் உயர்த்தியது வருத்தமளிக்கிறது.இதனால் குறுகிய கால, வீட்டு, வாகன, தனிநபர், தங்க நகை கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும். மாத தவணை தொகை கூடுதலாகும்.

ஏற்கனவே கடும் நிதிநெருக்கடி, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு, வேலையின்மை, பணவீக்கத்தால்தவிக்கும் தொழில், வணிக துறையினர், மக்கள் கூடுதல் நிதி நெருக்கடிக்கு தள்ளப்படுவர்.ரிசர்வ் வங்கி மீண்டும் வங்கிகளுக்கான வட்டியை அதிகரித்திருப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். மத்திய அரசு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X