கொரோனாவால் பாதித்த தொழில்முனைவோருக்கு மானிய கடன் 

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயால் பொருளாதாரம் பாதித்த குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அரசு மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது.மானியம் இணைந்த கடன் திட்டத்தின் கீழ், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் தொழில், புதிய நிறுவனம் துவங்கவும், அவர்களின் வாரிசுகள் மூலம் தொடங்கும் நிறுவனத்திற்கு கடன் வழங்கப்படும். திட்ட செலவு ரூ.5



ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயால் பொருளாதாரம் பாதித்த குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அரசு மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது.மானியம் இணைந்த கடன் திட்டத்தின் கீழ், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் தொழில், புதிய நிறுவனம் துவங்கவும், அவர்களின் வாரிசுகள் மூலம் தொடங்கும் நிறுவனத்திற்கு கடன் வழங்கப்படும்.

திட்ட செலவு ரூ.5 கோடியாகவும், மூலதன மானியம் உச்ச வரம்பு ரூ.25 லட்சமாகும். ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், குறு,சிறு நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்களின் தொழில் நுட்பத்தை மேம்படுத்துதல், நவீனமயமாக்கல் போன்றவைகளுக்கு கொரோனா காலத்தில் பொருளாதாரபாதிப்பு இருந்தால் மட்டும் மானியத்திற்கு தகுதியானவர்கள். இயந்திரங்களின் மதிப்பில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.25 லட்சத்திற்குள் கடன் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் , மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X