புதர்மண்டிய பயணியர் நிழற்கூடம்: மக்கள் அவஸ்தை| Dinamalar

புதர்மண்டிய பயணியர் நிழற்கூடம்: மக்கள் அவஸ்தை

Added : ஆக 06, 2022 | |
கரூர்,-கரூர் அருகே, சேதமடைந்துள்ள நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை, நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான, தவிட்டுப்பாளையத்தில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி, சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இதனால், நாமக்கல் மாவட்டத்திலிருந்து வரும் பஸ்கள், தவிட்டுப்பாளையம் சர்வீஸ் சாலை வழியாக கரூர் செல்கிறது.இந்நிலையில்,

கரூர்,-கரூர் அருகே, சேதமடைந்துள்ள நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை, நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான, தவிட்டுப்பாளையத்தில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி, சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இதனால், நாமக்கல் மாவட்டத்திலிருந்து வரும் பஸ்கள், தவிட்டுப்பாளையம் சர்வீஸ் சாலை வழியாக கரூர் செல்கிறது.இந்நிலையில், சர்வீஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடம், சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும், நிழற்கூடத்தை சுற்றி, முட்புதர்கள் அதிகம் முளைத்துள்ளன. இதனால், அரசு மற்றும் தனியார் பஸ்கள், நிழற்கூடம் முன் நிறுத்தப்படுவது இல்லை. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.எனவே, கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை தவிட்டுப்பாளையத்தில் உள்ள, பயணியர் நிழற்கூடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டியது அவசியம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X