வரலட்சுமி விரதம், ஆடிவெள்ளி அம்மன் கோயில்களில் வழிபாடு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : வரலட்சுமி விரதம்,ஆடி வெள்ளியை முன்னிட்டு, ராமநாதபுரம்நகர், புறநகர் பகுதிகளிலுள்ள அம்மன் கோயில்களில் சுமங்கலி பூஜையும், கூழ்காய்ச்சி பக்தர்கள் வழிபட்டனர்.வரலட்சுமி விரதம்,மூன்றாவது ஆடிவெள்ளியை முன்னிட்டு, ராமநாதபுரம் அல்லிக் கண்மாய் பெரியமாரியம்மன் கோயில் அம்மனுக்கு அபிேஷகம் செய்து, ஊஞ்சல் அலங்காரத்தில் அருள்பாலித்தார். வெட்டுடையாள் காளியம்மன்


ராமநாதபுரம் : வரலட்சுமி விரதம்,ஆடி வெள்ளியை முன்னிட்டு, ராமநாதபுரம்நகர், புறநகர் பகுதிகளிலுள்ள அம்மன் கோயில்களில் சுமங்கலி பூஜையும், கூழ்காய்ச்சி பக்தர்கள் வழிபட்டனர்.வரலட்சுமி விரதம்,மூன்றாவது ஆடிவெள்ளியை முன்னிட்டு, ராமநாதபுரம் அல்லிக் கண்மாய் பெரியமாரியம்மன் கோயில் அம்மனுக்கு அபிேஷகம் செய்து, ஊஞ்சல் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

வெட்டுடையாள் காளியம்மன் கோயில், சேதுபதிநகர் மல்லம்மாள் காளியம்மன் கோயில் ஆகிய இடங்களில் அபிேஷக அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. சிலர் சுமங்கலி பூஜை செய்து பெண் பக்தர்களுக்கு வளையல், ஜாக்கெட், மஞ்சள்கயிறு, கிழங்கு, குங்குமம், சந்தனம் வழங்கினர். யானைக்கல் வீதி பிள்ளைக்காளியம்மன், ஓம்சக்திநகர் ஒத்த பனைமரத்து காளியம்மன் கோயில், வடக்குநகர் தேவி கருமாரியம்மன்கோயில், அண்ணாநகர் சந்தனமாரியம்மன் கோயில், ராமேஸ்வரம் ரோடு ரயில்வேபாலம் வெட்டுடையார் காளியம்மன் கோயில் ஆகிய இடங்களில் வரலட்சுமி விரதம், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.

கூழ்காய்ச்சியும், வேப்பிலை, மஞ்சள் பால் அபிேஷகம்செய்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். * பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசியச் செயலாளர்வேலுார் இப்ராஹிம், ராமநாதபுரம் பெரியமாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் மரியாதை செய்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் ஆத்மாகார்த்தி, நிர்வாகிகள், உறுப்பினர்கள் உடனிருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X