கரூர்,-அமராவதி அணையிலிருந்து, ஆற்றில் வினாடிக்கு, 6,000 கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 3,855 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 2,279 கன அடி தண்ணீர், நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. தண்ணீர் வரத்து அதிகரிப்பால், நேற்று காலை வினாடிக்கு ஆற்றில், 6,000 கன அடியாக தண்ணீர் திறப்பு உயர்த்தப்பட்டது. கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 1,941 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 121 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 87.31 அடியாக இருந்தது.நங்காஞ்சி அணை திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.86 அடியாக உள்ளது. இதனால், நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆத்துப்பாளையம் அணைக.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 15.87 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மழை நிலவரம்கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பஞ்சப்பட்டி, 1.2, கடவூர், 13, மயிலம்பட்டி, 2, ஆகிய அளவுகளில் மழை பெய்துள்ளது.