போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் க.பரமத்தியில் அமைக்க எதிர்பார்ப்பு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கரூர்,க.பரமத்தியில், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.கரூர்-கோவை சாலையில் க.பரமத்தி உள்ளது. அதன் வழியாக, கோவை, திருப்பூர், ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மேலும், சின்னதாராபுரம் வழியாக, பொள்ளாச்சி, கேரளா பகுதிகளுக்கும் வாகனங்கள் செல்கிறது. இந்த இரண்டு முக்கிய சாலைகளில், க.பரமத்தி, தென்னிலை மற்றும்

கரூர்,க.பரமத்தியில், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.கரூர்-கோவை சாலையில் க.பரமத்தி உள்ளது. அதன் வழியாக, கோவை, திருப்பூர், ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மேலும், சின்னதாராபுரம் வழியாக, பொள்ளாச்சி, கேரளா பகுதிகளுக்கும் வாகனங்கள் செல்கிறது. இந்த இரண்டு முக்கிய சாலைகளில், க.பரமத்தி, தென்னிலை மற்றும் சின்னதாரா புரம் சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. ஆனால், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் இல்லை. இதனால், போக்குவரத்து சீரமைப்பு தொடர்பான பணிகளை சட்டம் - ஒழுங்கு போலீசாரே கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே, சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்களில், போலீசார் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.இதனால், போக்குவரத்து சீரமைப்பு பணிகளை கவனிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். எனவே, க.பரமத்தியை தலைமையிடமாக கொண்டு, போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X