மாவட்டத்தில் பயிர்களுக்கு சேதம் இல்லை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கரூர்,-''கரூர் மாவட்டத்தில் பயிர்களுக்கு சேதமில்லை,'' என, கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ் தெரிவித்தார்.கரூர் அருகே, அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை, காவிரியாற்றின் கரையோர பகுதியான தவிட்டுப்பாளையம் மற்றும் மாயனுார் கதவணையை மாவட்ட, கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ், நேற்று பார்வையிட்டார்.அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மேட்டூர் அணையிலிருந்து,

கரூர்,-''கரூர் மாவட்டத்தில் பயிர்களுக்கு சேதமில்லை,'' என, கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ் தெரிவித்தார்.கரூர் அருகே, அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை, காவிரியாற்றின் கரையோர பகுதியான தவிட்டுப்பாளையம் மற்றும் மாயனுார் கதவணையை மாவட்ட, கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ், நேற்று பார்வையிட்டார்.அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மேட்டூர் அணையிலிருந்து, இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், அமராவதி அணையிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் வெள்ளநீர் பாதித்த பகுதிகளில் வசித்து வந்த, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு, தரமான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேட்டூர் அணை உள்ளிட்ட, பல அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தான், கரூர் மாவட்டத்துக்கு வருகிறது. கடந்த, நான்கு நாட்களாக மழை இல்லை. இதனால், கரூர் மாவட்டத்தில் பயிர்களுக்கு சேதம் ஏற்படவில்லை. இருப்பினும், மாவட்ட நிர்வாகம் உயிர்பலி ஏற்படாத வகையிலும், பயிர்களுக்கு சேதம் ஏற்படாத வகையிலும், நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார். அப்போது, கலெக்டர் பிரபுசங்கர், டி.ஆர்.ஓ., லியாகத், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ உள்பட பலர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X