'சரக்கு போக்குவரத்தில் புதிய மைல்கல்'

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சேலம்-சேலம் ரயில்வே கோட்டத்தில், 67வது ரயில்வே வார விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில், சேலம் கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ், சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு கேடயங்கள் வழங்கி பேசியதாவது:இன்று சிலருக்கு மட்டும் பாராட்டு சான்றிதழ், விருதுகள் வழங்கப்பட்டாலும், சேலம் கோட்டத்தின் சிறப்பான செயல்பாட்டில், அனைத்து ஊழியர்களுக்கும் பங்குள்ளது. ஒவ்வொரு பணியும் குழு முயற்சியால்


சேலம்-சேலம் ரயில்வே கோட்டத்தில், 67வது ரயில்வே வார விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில், சேலம் கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ், சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு கேடயங்கள் வழங்கி பேசியதாவது:இன்று சிலருக்கு மட்டும் பாராட்டு சான்றிதழ், விருதுகள் வழங்கப்பட்டாலும், சேலம் கோட்டத்தின் சிறப்பான செயல்பாட்டில், அனைத்து ஊழியர்களுக்கும் பங்குள்ளது. ஒவ்வொரு பணியும் குழு முயற்சியால் சாதிக்கப்பட்டுள்ளது. 2021 - 22ம் ஆண்டில், சரக்கு போக்குவரத்தில், 30 லட்சம் டன் கையாண்டு, புது மைல்கல்லை எட்டியுள்ளது. சேலம் - விருதாசலம் பாதையில் மின்மயமாக்கல் பணி, கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு பசுமை பிளாட்டினம் விருது உள்ளிட்டவையும் மகுடம் சூட்டியுள்ளது. பல்வேறு பிரிவுகளில், 16 விருதுகள் பெறப்பட்டுள்ளன. சிறந்த செயல்பாட்டுக்கு, 350 அலுவலர்கள், ஊழியர்கள் சான்றிதழ் பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார். கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X