70 ஆயிரம் வளையல்; ரூ.1 லட்சத்தால்் ஜொலித்த அம்மன்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சேலம்-ஆடி, 3வது வெள்ளியையொட்டி, 70 ஆயிரம் வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு, அஸ்தம்பட்டி மாரியம்மன் ஜொலித்தார்.ஆடி, 3வது வெள்ளி, வரலட்சுமி விரதத்தையொட்டி, சேலத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. கோட்டை மாரியம்மன் கோவிலில், காலை முதலே பூஜை பொருட்களுடன் வந்து பக்தர்கள் வழிபட்டனர். முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால்

சேலம்-ஆடி, 3வது வெள்ளியையொட்டி, 70 ஆயிரம் வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு, அஸ்தம்பட்டி மாரியம்மன் ஜொலித்தார்.ஆடி, 3வது வெள்ளி, வரலட்சுமி விரதத்தையொட்டி, சேலத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. கோட்டை மாரியம்மன் கோவிலில், காலை முதலே பூஜை பொருட்களுடன் வந்து பக்தர்கள் வழிபட்டனர். முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். பக்தர்களுக்கு, கூழ், சாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அஸ்தம்பட்டி மாரியம்மனை, 70 ஆயிரம் வளையல்களால் அலங்கரித்தனர். இதனால், பக்தர்கள் பரவசமடைந்து, கண்கொள்ளா காட்சியாக அம்மனை தரிசித்தனர். எல்லைப்பிடாரியம்மனுக்கு தாலி கயிறுகள் மூலம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில், துளசி மாடத்துக்கு பெண்கள் பூஜைகள் செய்தனர். அதே பகுதியில், புதுத்தெருவில் உள்ள மாரியம்மன கோவிலில், மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது.சுகவனேஸ்வரர், காசிவிஸ்வநாதர், கோட்டை பெருமாள் கோவிலில் குகை காளியம்மன், மாரியம்மன், அம்மாபேட்டை காளியம்மன், மாரியம்மன், டவுன் கன்னிகா பரமேஸ்வரி உள்ளிட்ட அம்மன் கோவில்களில் திரளான பக்தர்கள் வழிபட்டனர். வரலட்சுமி விரதத்தையொட்டி பலரும் தங்கள் வீடுகளில் அம்மனை வழிபட்டனர். காலை முதல் மாலை வரை, ஏராளமான பெண்கள் விரதம் இருந்தனர். திருவிளக்கு பூஜைஆத்துார், கோட்டை சம்போடை வனத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோவிலில், தீபலட்சுமி திருவிளக்கு பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு, பால், பழம், மஞ்சள், தயிர், குங்கும அபிஷேகம் நடந்தது. மூலவர் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். 450 தீபலட்சுமி திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள், தீபம் ஏற்றி வழிபட்டனர். அவர்களுக்கு தாலி கயிறு, மஞ்சள், குங்குமம், ஜாக்கெட் துணி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. உலக நன்மையொட்டி நடந்த பூஜையின்போது, அன்னதானம் வழங்கப்பட்டது.திருவிளக்கு பூஜையின்போது, தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் நகராட்சி தலைவர் நிர்மலாபபிதா, கருவறை வாசலில் அமர்ந்து பூஜை செய்தார். தி.மு.க., கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பலரும், திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர்.ஆத்துார் பெரியமாரியம்மன் கோவிலில் அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து, தாமரை பூக்களுடன், ஐஸ்வர்ய மஹாலட்சுமி அலங்காரத்தில் பெரியமாரியம்மன் அருள்பாலித்தார். அப்போது, கூழ் படையல் செய்து பக்தர்களுக்கு வழங்கினர். அதேபோல், ஆத்துார், ராணிப்பேட்டை சாலையில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற கோவிலில், நேற்று ஏராளமான பக்தர்கள், பால் குடம், அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.17ம் ஆண்டுஓமலுார் கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆன்மிக நற்பணி குழு சார்பில், 17ம் ஆண்டாக, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. கடைவீதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில், 108 திருமாங்கல்ய திருவிளக்கு பூஜை நடந்தது. மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தாரமங்கலம், கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். அதே பகுதியில், சங்ககிரி சாலையில் உள்ள சக்தி மாரியம்மன், 10, 20, 50, 100, 500 ரூபாய் நோட்டுகளாக, ஒரு லட்சம் ரூபாயால் காட்சியளித்தார்.* இடைப்பாடி, அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. கவுண்டம்பட்டி சின்னமாரியம்மனுக்கு பால், சந்தனம், இளநீர், தயிர், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்பட்டது. பின் லட்சுமி அலங்காரத்தில் சின்னமாரியம்மன் அருள்பாலித்தார். 100க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலர் தரிசனம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X