சில வரி செய்திகள்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
நகராட்சி தலைவர் ஆய்வுபவானி நகராட்சிக்கு உட்பட்ட காவேரி கரையோர பகுதிகளில், 200 வீடுகளை இரண்டு நாட்களாக வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. இங்கு வசிக்கும், 200க்கும் மேற்பட்ட மக்கள், திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி செய்து வருகிறது. அவ்விடங்களை நகராட்சி தலைவர் சிந்துாரி இளங்கோவன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு

நகராட்சி தலைவர் ஆய்வுபவானி நகராட்சிக்கு உட்பட்ட காவேரி கரையோர பகுதிகளில், 200 வீடுகளை இரண்டு நாட்களாக வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. இங்கு வசிக்கும், 200க்கும் மேற்பட்ட மக்கள், திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி செய்து வருகிறது. அவ்விடங்களை நகராட்சி தலைவர் சிந்துாரி இளங்கோவன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். வெள்ள நீர் வடியும் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கப்படும் என்று, தலைவர் தெரிவித்தார். ஆய்வின்போது பவானி நகர தி.மு.க., செயலாளர் நாகராஜன் உடனிருந்தார்.
"குடிநீரை காய்ச்சி குடிங்க'ஈரோடு மாவட்ட நிர்வாகம், ஈரோடு மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில், காவிரி மற்றும் பவானி ஆற்று நீர், சுத்திகரிப்பு செய்து குடிநீராக வினியோகிக்கப்படுகிறது. தற்போது காவிரி ஆற்றில், 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் செல்வதாலும், பல்வேறு மாவட்ட மழை நீர் காவிரியில் கலப்பதாலும் கலங்கிய நிலையில் தண்ணீர் செல்கிறது. சுத்திகரிப்பு செய்து குடிநீராக வழங்கி வருவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆனாலும், தடையின்றி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த நீரை குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தும்போது, நன்கு காய்ச்சி வடிகட்டி பயன்படுத்த அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X