ரூ.25 லட்சம் மதிப்பு சந்தன மரம் கடத்தல்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ஈரோடு,-ஈரோடு அருகே, தோட்டத்தில் வளர்க்கப்பட்ட சந்தன மரம், நள்ளிரவில் வெட்டி கடத்தினர்.ஈரோடு அருகே நசியனுார், ராயபாளையம், மரபுளியந்தோட்டத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி, 75; இவரது தோட்டத்தில் வனத்துறை அனுமதி பெற்று, சந்தன மரங்களை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில், ஐந்து பேர் கும்பல் தோட்டத்தில் புகுந்தது. 25 ஆண்டு பழமையான சந்தன மரத்தை வெட்டி சென்றனர். இதன்


ஈரோடு,-ஈரோடு அருகே, தோட்டத்தில் வளர்க்கப்பட்ட சந்தன மரம், நள்ளிரவில் வெட்டி கடத்தினர்.ஈரோடு அருகே நசியனுார், ராயபாளையம், மரபுளியந்தோட்டத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி, 75; இவரது தோட்டத்தில் வனத்துறை அனுமதி பெற்று, சந்தன மரங்களை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில், ஐந்து பேர் கும்பல் தோட்டத்தில் புகுந்தது. 25 ஆண்டு பழமையான சந்தன மரத்தை வெட்டி சென்றனர். இதன் மதிப்பு, 25 லட்சம் ரூபாய் இருக்கும், என வனத்துறையினர் கூறுகின்றனர்.தோட்டத்தை சுற்றிலும் மின் வேலி அமைத்து, 'சிசிடிவி' கேமரா வைத்து கண்காணித்து வருகிறார். அதையும் மீறி மரத்தை வெட்டி கடத்தியுள்ளனர். ராமசாமி புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். 'சிசிடிவி' கேமராவில் ஐந்து பேர் கும்பல் மரத்தை வெட்டி, 12 அடி உயரத்துக்கான மரத்தை வெட்டி கொண்டு செல்வது பதிவாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X