புத்தக திருவிழாக்கள் தேவை; முதல்வர் பேச்சு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ஈரோடு,-''தமிழகம் அறிவு புரட்சி மாநிலமாக மாற புத்தக திருவிழாக்கள் தேவை,'' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.ஈரோடு, சி.என்.கல்லுாரி மைதானத்தில், மக்கள் சிந்தனை பேரவை சார்பில், 18வது ஈரோடு புத்தக கண்காட்சி நேற்று துவங்கியது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மேயர் நாகரத்தினம், எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா முன்னிலை வகித்தனர். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின்

ஈரோடு,-''தமிழகம் அறிவு புரட்சி மாநிலமாக மாற புத்தக திருவிழாக்கள் தேவை,'' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.ஈரோடு, சி.என்.கல்லுாரி மைதானத்தில், மக்கள் சிந்தனை பேரவை சார்பில், 18வது ஈரோடு புத்தக கண்காட்சி நேற்று துவங்கியது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மேயர் நாகரத்தினம், எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா முன்னிலை வகித்தனர். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார்.காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின், புத்தக திருவிழாவை துவக்கி வைத்து பேசியதாவது:அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த, 4.96 கோடி ரூபாய் ஒதுக்கினோம். கடந்த ஜன., மாதம் சென்னையில் புத்தக கண்காட்சி நடத்த தேதி குறித்து, கொரோனா பரவலால் நின்று போனது. புத்தக விற்பனையாளர்கள் நஷ்டம் அடைந்ததாக தெரிவித்ததும், இழப்பீடு வழங்கப்பட்டது.பதிப்பாளர் கோரிக்கையை ஏற்று, சென்னையில் நிரந்தர புத்தக பூங்கா அமைக்க உத்தரவிட்டுள்ளேன். எழுத்தாளர்களை கவுரவிக்க எழுதுகோள் விருது வழங்கப்படுகிறது. நுாலகத்துக்கு சிற்றிதழ் வழங்கும் பணி நடக்கிறது. திசை தோறும் மொழி பெயர்ப்பு திட்டத்தில் சிறந்த தமிழ் நுால்கள் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. பிற மொழிகளில் சிறந்த நுால்கள், தமிழில் மொழி பெயர்க்கப்படுகிறது.எந்த மொழிக்கும் இல்லாத மிகப்பெரிய சிறப்பு தமிழுக்கு உள்ளதை உணர்ந்துள்ளோம். அத்தகைய தமிழை காக்க, தமிழின் சிறப்பை வெளி கொண்டு வர, புத்தக கண்காட்சியை ஊக்கப்படுத்துவோம். அறிவில் சிறந்த நுால்களை வாசிக்க வேண்டும். என்னை சந்திக்க வருவோரிடம், நுால்களை மட்டும் கொடுங்கள் என்கிறேன். தமிழகத்தில் புத்தகம் வாசிப்பது ஒரு இயக்கமாக மாறுவதை காண முடிகிறது. அண்ணாதுரை கூறியதுபோல, வீட்டுக்கு ஒரு நுாலகத்தை உருவாக்குவோம். தமிழகம் அறிவு புரட்சி மாநிலமாக மாற, புத்தக திருவிழாக்கள் தேவை. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X